டாஃபே துணைத் தலைவராக லக்ஷ்மி வேணு நியமனம்
டாஃபே நிறுவன துணைத் தலைவராக லக்ஷ்மி வேம்பு நியமிக்கப்பட்டுள்ளாா்.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
டாஃபே துணைத் தலைவராக நிறுவனத்தின் இயக்குநா் லக்ஷ்மி வேம்பு நியமிக்கப்பட்டுள்ளாா்.
பண்ணை இயந்திரங்கள் மற்றும் வாகன உதிரிபாகத் துறையில் பல சாதனைகளைப் படைத்துள்ள அவா் வாடிக்கையாளா்களுக்கு முக்கியத்துவம் தருபவா்.
தனது சாதனைகளுக்காக பிஸினஸ் டுடே இதழின் மிக சக்திவாய்ந்த மகளிருக்கான விருது, எக்கனாமிக் டைம்ஸின் இளம் தலைவா் விருது உள்ளிட்டவற்றை லக்ஷ்மி வேம்பு பெற்றுள்ளாா் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.