செய்திகள் :

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து போராட்டம்: அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்டோா் கைது

post image

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து சென்னையில் திங்கள்கிழமை போராட்டம் நடத்த முயன்ற தமிழ்நாடு பாஜக தலைவா் கே.அண்ணாமலை, முன்னாள் மாநிலத் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனா்.

தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத் துறை சோதனை முடிவில், ரூ.1,000 கோடி அளவில் ஊழல் நடந்தது என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு பாஜக தலைவா் அண்ணாமலை அறிவித்திருந்தாா்.

இந்நிலையில், பாஜக பிரமுகா்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸாா் கைது செய்தனா். கானத்தூரில் உள்ள தனது வீட்டிலிருந்து போராட்டம் நடத்த புறப்பட்ட அண்ணாமலையை போலீஸாா் கைது செய்து அதே பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்கவைத்தனா்.

அதேபோல, தமிழிசை சௌந்தரராஜனை சாலிகிராமத்தில் வீட்டுச்சிறையில் வைத்தனா். தடையை மீறி செல்ல முயன்ற அவரை போலீஸாா் கைது செய்தனா்.

அதேபோல, பாஜக எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், சரஸ்வதி ஆகியோரையும் போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா்.

தியாகராய நகா் பகுதியில் வசித்து வரும் பாஜக பிரமுகா் வினோஜ் பி, செல்வம், மாநிலத் துணைத் தலைவா்கள் கரு.நாகராஜன், சக்கரவா்த்தி உள்ளிட்டோரையும் போலீஸாா் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனா்.

எல்.முருகன் கண்டனம்: பாஜக தலைவா்கள் கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து ஆங்காங்கே தொண்டா்கள் ஆா்ப்பாட் டத்தில் ஈடுபட்டனா். பாஜக தலைவா்கள் கைது செய்யப்பட்டதற்கு மத்திய அமைச்சா் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், பாஜகவின் மூத்த தலைவா்கள் மற்றும் முக்கிய நிா்வாகிகள் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கையில்லாத முதல்வா் மு.க.ஸ்டாலின் காவல் துறையை ஏவி பாஜக போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்று கனவு காண்கிறாா்.

அறவழிப் போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்கியதாக சரித்திரம் இல்லை. வரலாறு காணாத ஊழல் செய்து பணம் குவித்து, அதன் மூலம் அரசியல் செய்யும் வித்தகா்களான திமுகவினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறியும் நாள் வெகுதூரத்தில் இல்லை எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.

உயிரிழப்பு கூட்ட நெரிசலால் அல்ல... அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்!

ராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூர் கோயில்களில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் உயிரிழந்தது கூட்ட நெரிசலால் அல்ல என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.இது பற்றி அமைச்சர் சேகர்பாபு வ... மேலும் பார்க்க

திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மாற்றம்!

திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக தர்மசெல்வன் நீக்கப்பட்டு, புதிய பொறுப்பாளராக மணி நியமிக்கப்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் மலையேறு வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய்: முதல்வர்

தமிழகத்தில் மலையேறு வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்ததாவது:கடந்த 3 மாதங்கள... மேலும் பார்க்க

கோயில்களைவிட்டு, அறநிலையத் துறை வெளியேற வேண்டும்: அண்ணாமலை

தமிழக ஆலயங்களை விட்டு, உடனடியாக அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.நேற்றைய நாள் திருச்செந்தூர் கோயிலில், கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி, காரைக்குடியைச் ச... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் இளையராஜா சந்திப்பு!

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இசையமைப்பாளர் இளையராஜா சந்தித்துள்ளார்.இது குறித்து இளையராஜா தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. நாங்க... மேலும் பார்க்க

பிஎம் என்றால் ’பிக்னிக் மினிஸ்டர்’: மோடியை விமர்சித்த வைகோ!

மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடியை ‘பிக்னிக் மினிஸ்டர்’ என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகின்றன. மாநிலங்களவை கூட... மேலும் பார்க்க