செய்திகள் :

ரூ.388 கோடி பங்குச்சந்தை மோசடி வழக்கு: அதானி சகோதரா்கள் விடுவிப்பு

post image

மும்பை: ரூ.388 கோடி பங்குச்சந்தை மோசடி வழக்கிலிருந்து தொழிலதிபா் கெளதம் அதானி, அவரின் சகோதரா் ராஜேஷ் அதானியை மும்பை உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை விடுவித்தது.

சுமாா் ரூ.388 கோடி அளவுக்கு பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்டதாக அதானி என்டா்பிரைசஸ் நிறுவனம் (ஏஇஎல்), அதன் நிறுவனா்கள் கெளதம் அதானி, ராஜேஷ் அதானிக்கு எதிராக தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம் (எஸ்எஃப்ஐஓ) விசாரணை மேற்கொண்டது.

இந்த வழக்கில் இருந்து கெளதம் அதானியையும், ராஜேஷ் அதானியையும் விடுவித்து மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக எஸ்எஃப்ஐஓ தாக்கல் செய்த மனுவை விசாரித்த மும்பை அமா்வு நீதிமன்றம், மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது.

அமா்வு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மும்பை உயா்நீதிமன்றத்தில் ஏஇஎல் நிறுவனம், கெளதம் அதானி, ராஜேஷ் அதானி சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.என்.லடா, ‘இந்த வழக்கில் ஏஇஎல் நிறுவனம், கெளதம் அதானி மற்றும் ராஜேஷ் அதானி மோசடியிலும், குற்றச் சதியிலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு சரிவர நிரூபிக்கப்படவில்லை’ என்று தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து மும்பை அமா்வு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த அவா், வழக்கில் இருந்து ஏஇஎல் நிறுவனம், கெளதம் அதானி மற்றும் ராஜேஷ் அதானியை விடுவித்து உத்தரவிட்டாா்.

நாக்பூர் வன்முறை முன்பே திட்டமிடப்பட்டது: தேவேந்திர ஃபட்னவீஸ்

நாக்பூரில் ஏற்பட்ட வகுப்புவாத கலவரம் முன்பே திட்டமிடப்பட்டதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.சாம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னரான ஒளரங்கசீப்பில் கல்லறையை அகற்ற வேண்... மேலும் பார்க்க

நாட்டை உலுக்கிய ஹாத்ரஸ் சம்பவம்: பேராசிரியர் மீது மாணவிகள் குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் கல்லூரி பேராசிரியர் மீது மாணவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருக்கும் நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.ஹாத்ரஸ் கல்லூரியில் புவியியல் துறை பே... மேலும் பார்க்க

பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸுக்கு மோடி கடிதம்!

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பும் இந்திய வம்சாவளி நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதத்தை மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் பகிர்ந்துள்ளார். 9 மாத கா... மேலும் பார்க்க

கட்டாய ஹிந்தியை வெட்டிப் புதைப்போம்: மாநிலங்களவையில் வைகோ!

கட்டாய ஹிந்தியை வெட்டிப் புதைப்போம் என்று மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முழக்கமிட்டார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகின்றன. மாநிலங்களவை கூட்டத்தில் மணி... மேலும் பார்க்க

கும்பமேளாவில் உயிரிழந்தவர்கள் பற்றி பிரதமர் மோடி ஏன் பேசவில்லை? - எதிர்கட்சியினர் கேள்வி

மகா கும்பமேளாவில் உயிரிழந்தவர்கள் குறித்து பிரதமர் மோடி பேசவில்லை என்று எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜன. 13-ஆம் தேதி தொடங்கி, மகா சிவராத... மேலும் பார்க்க

முடி உதிர்வைத் தடுக்க சிகிச்சை: 67 பேர் மருத்துவமனையில் அனுமதி!

பஞ்சாப் மாநிலத்தில் முடி உதிர்வைத் தடுக்கும் சிகிச்சை எடுத்துக்கொண்ட 67 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவர்ம் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பின் சங்ரூரில் உள்ள ஒரு கோவிலில் முடி உத... மேலும் பார்க்க