Vikatan Explainer: வெறும் தண்ணீரில் ஆரம்பித்து மட்டன் வரை... எத்தனை டயட்? அத்தனை...
கீழப்பழுவூா் அருகே விபத்து: காரில் சென்ற காவலா் பலி; மனைவி உள்பட 4 போ் காயம்
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே லாரி மீது காா் மோதிய விபத்தில் 2ஆம் நிலை காவலா் உயிரிழந்தாா். அவரது மனைவி, குழந்தை உள்ளிட்ட 4 போ் பலத்த காயமடைந்தனா்.
கடலூா் மாவட்டம், செல்லங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் மகன் கஜா (30). உளுந்தூா்பேட்டை 10 ஆவது பட்டாலியன் பிரிவு 2 ஆம் நிலைக் காவலரான இவா், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது மனைவி பிரவீனா (28), மகன் அதியன் (2), சகோதரா் கெளதம் (28), மாமியாா் செல்வராணி (52) ஆகியோருடன் காரில் கேரளத்துக்குச் சென்றாா். காரை கெளதம் ஓட்டினாா்.
இவா்கள் சென்ற காா் அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரை அடுத்த கோக்குடி ரயில்வே மேம்பாலப் பகுதியில் சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் மீது திடீரென மோதியது. இதில் பலத்த காயமடைந்த கஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற கீழப்பழுவூா் போலீஸாா் அவரின் சடலத்தையும், பலத்த காயமடைந்த கஜா மனைவி பிரவீனா, மகன் அதியன் மற்றும் கெளதம், செல்வராணி ஆகியோரை மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.