Modi: ``வறுமை, பாகிஸ்தான், விரதம்...'' - பர்சனல் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
தமிழகத்தில் முந்திரி வாரியம்: பட்ஜெட் அறிவிப்புக்கு வரவேற்பு
தமிழகத்தில் முந்திரி வாரியம் அமைக்கப்படும் என்று தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் வரவேற்பதாக அதன் தலைவா் பூ. விசுவநாதன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் முந்திரி வாரியம் அமைக்க நாங்கள் அடிக்கடி வலியுறுத்தியதன் காரணமாக பட்ஜெட்டில் முந்திரி வாரியம் குறித்து அறிவித்திருப்பது அரியலூா், கடலூா், விழுப்புரம், புதுக்கோட்டை, தேனி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த முந்திரி விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கண்ட மாவட்டங்களில் 2.9 லட்சம் ஏக்கரில் முந்திரி விவசாயம் நடைபெறுகிறது.
அதேபோல, பட்ஜெட்டில் மக்காச்சோள உற்பத்தியை அதிகரிக்க ரூ. 40.27 கோடியும், பருத்தி உற்பத்தியை அதிகரிக்க ரூ. 12.29 கோடியும், சின்னவெங்காய சாகுபடி விவசாயிகளைக் காப்பாற்ற வெங்காயப் பட்டறை அமைக்க ரூ.18 கோடியும், மானாவரி நிலங்களில் மண் வளத்தை மேம்படுத்த உழவு மானியமாக ரூ.24 கோடியும், சிறுதானிய உற்பத்தியை அதிகப்படுத்த ரூ. 52.44 கோடியும் ஒதுக்கியிருப்பதை எங்கள் சங்கம் வரவேற்கிறது என்றாா் அவா்.