அதிமுக ஆலோசனை கூட்டம்; மீண்டும் புறக்கணித்த செங்கோட்டையன் - சலசலக்கும் அதிமுக மு...
பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
அரியலூா் அருகே சனிக்கிழமை இரவு பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
விழுப்பனங்குறிச்சி பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் ரமேஷ் (22). சனிக்கிழமை இரவு இவா் விழுப்பனங்குறிச்சியிலிருந்து திருமானூருக்கு சென்ற பைக்கும், எதிரே வந்த மற்றொரு பைக்கும் திடீரென மோதிக் கொண்டன. இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். திருமானூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.