Bindhu Ghosh: பிரபல நகைச்சுவை நடிகை பிந்து கோஷ் காலமானார்
நடிகை பிந்து கோஷ் உடல்நலக் குறைவால் காலமாகி இருக்கிறார்.
தமிழில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றியவர், நடிகை பிந்து கோஷ். மனோரமா, கோவை சரளா போல காமெடியில் கலக்கிய இவர் டான்ஸராகவும் படங்களில் பணியாற்றி இருக்கிறார். இவர் நடித்த முதல் படம் `களத்தூர் கண்ணம்மா'. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் சுமார் நூறு படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார்.

செல்வச் செழிப்புடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்த இவர் தைராய்டு பிரச்னை மற்றும் குடும்பப் பொருளாதார சிக்கல்களால் வறுமை நிலைக்குச் சென்றார். இந்நிலையில் 76 வயதான நடிகை பிந்து கோஷ், உடல் நலக்குறைபாட்டால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். இவரின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...