செய்திகள் :

உத்தரகண்ட் நிதி அமைச்சர் ராஜிநாமா

post image

உத்தரகண்ட் நிதி அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் தனது பதவியை நேற்று ராஜிநாமா செய்தார்.

உத்தரகண்டில் கடந்த பிப்ரவரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. அப்போது மலைவாழ் மக்கள் குறித்து நிதி அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் பேசியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதும் போராட்டங்களும் அரங்கேறின.

பின்னர் அமைச்சர் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். தொடர்ந்து, அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தார். முதல்வர் புஷ்கர் சிங் தாமியை அவரது இல்லத்தில் சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை பிரேம்சந்த் வழங்கினார்.

அதிமுக எம்எல்ஏக்களுடன் இபிஎஸ் ஆலோசனை: செங்கோட்டையன் பங்கேற்கவில்லை

எனது வார்த்தைகளுக்கும் அவற்றின் தாக்கத்திற்கும் நான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன் என்று பிரேம்சந்த் பதவி விலகும்போது கூறினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், நமது மாநிலம் முன்னேற வேண்டும் என்பதே எனது விருப்பம்.

மாநில முன்னேற்றத்திற்காக உதவுவதற்கு நான் எந்த வகையிலும் பங்களிக்கத் தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலரின் வரலாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டது: மத்திய அமைச்சர்

சுதந்திர போராட்ட வீரர்கள் பலரின் தியாகங்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டதாக மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங... மேலும் பார்க்க

வாக்காளர் குளறுபடி, தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க மறுப்பு! எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

வாக்காளர் அடையாள அட்டை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் செய்த குளறுபடி, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிந... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: வைக்கோல் தீப்பிடித்ததில் 4 சிறுவர்கள் பலி

ஜார்க்கண்டில் வைக்கோல் குவியல் தீப்பிடித்ததில் 4 சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட், மாநிலம், மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள வீட்டிற்கு அருகிலிருந்த வைக்கோல் குவியல் த... மேலும் பார்க்க

விண்வெளி விஞ்ஞானியாவது எப்படி? யாரெல்லாம் ஆக முடியும்?

விண்வெளி விஞ்ஞானி என்ற பணி பெயரையும் புகழையும் நல்ல சம்பளத்தையும் கொடுத்தாலும் எல்லோராலும் விண்வெளி விஞ்ஞானி ஆகிவிட முடியாது. அந்தப் பணியில் ஏகப்பட்ட ஆபத்துகள் இருந்தாலும், அதி தீவிர உடல் பாதிப்புகள்,... மேலும் பார்க்க

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தை காலமானார்!

முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தையுமான பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பிரதான் திங்கள்கிழமை காலமானார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அடல் பிகாரி வாஜ்பாய் அரசில் ... மேலும் பார்க்க

பாபர் மசூதியின் நிலைமை ஔரங்கசீப் கல்லறைக்கும் ஏற்படும்: ஹிந்து அமைப்புகள் மிரட்டல்!

முகாலயப் பேரரசர் ஔரங்கசீப் கல்லறையை அகற்றாவிட்டால் மாநிலம் முழுவது போராட்டம் நடத்தவிருப்பதாக ஹிந்து அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன. முகாலயப் பேரரசர் ஔரங்கசீப் மராத்திய அரசரான சம்பாஜி மகாராஜாவை கொடும... மேலும் பார்க்க