கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துடைமை... இந்தியாவில் இஸ்லாமியர் நிலை பற்றிய புதிய அறிக...
Dhoni : 'நான் செய்த மிகப்பெரிய தவறு அது..!'- தோனி குறிப்பிட்ட அந்த ஐ.பி.எல் சம்பவம்!
இந்திய அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவர் தோனி. 3 ஐசிசி கோப்பைகள், 5 ஐபிஎல் கோப்பைகளை அணிக்காக வென்று கொடுதித்திருக்கிறார். தோனியின் அடையாளமே அவர் களத்தில் எப்போதும் அமைதியாக இருந்து தனது திட்டத்தை நகர்த்துவார் என்பது தான். இதனால் ரசிகர்கள் தோனியை கேப்டன் கூல் என்று அழைப்பார்கள். இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நீங்கள் எப்போதாவது களத்தில் உங்களுடைய நிதானத்தை இழந்து இருக்கிறீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
வெற்றி முக்கியம்
அதற்கு பதில் அளித்த தோனி, " நிறைய முறை இழந்து இருக்கிறேன். ஒருமுறை ஐபிஎல் போட்டியின்போது திடீரென்று கோபமடைந்து களத்திற்குள் சென்று அம்பயர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். அது நான் செய்த மிகப்பெரிய தவறு என நினைக்கின்றேன். பல சமயங்களில் நமக்கு நிச்சயமாக கோபம் வரும். ஏனென்றால் நாங்கள் ஒரு போட்டியில் விளையாடுகிறோம். அப்போது வெற்றி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரு கட்டாயம் இருக்கும். இதற்காக நாம் பல விஷயங்களை நிர்வகிக்க வேண்டும். ஒரு விஷயம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு நிச்சயம் கோபம் வரும். அந்த சமயத்தில் உங்கள் வாயை நீங்கள் மூடி கொள்வது நல்லது. கொஞ்ச நேரம் அதை விட்டு விலகி விடுங்கள். இவ்வாறு செய்தால் உங்களால் நெருக்கடியை சமாளிக்க முடியும்" என்று பதிலளித்திருக்கிறார்.

தோனி குறிப்பிட்ட அந்த போட்டி 2019 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கும் சிஎஸ்கே அணிக்கும் இடையே ஜெய்ப்பூரில் நடைபெற்றது. அப்போது பென் ஸ்டோக்ஸ் வீசிய நோ பாலை இரண்டாவது நடுவர் திரும்ப பெற்றதால் கடுப்பான தோனி களத்திற்கு வந்து நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் தோனிக்கு போட்டியிலிருந்து 50 சதவீதம் ஊதியம் அபராதமாக விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs