செய்திகள் :

IPL 2025: "தோனி அல்ல; இவருடைய கேப்டன்சியில் விளையாடுவதே என் விருப்பம்" - கனவைப் பகிரும் ஷஷாங்க் சிங்

post image

வெளியூர் சண்ட போதும், இனி உள்ளூர் சண்ட போடுவோம் என சாம்பியன்ஸ் ட்ராபி முடிந்த கையோடு, வருகின்ற சனிக்கிழமை தொடங்கும் ஐபிஎல் தொடரை வரவேற்கக் காத்திருக்கின்றனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள். எப்போதும் போல, இந்த முறை கப் அடிப்போம் என்று ஆர்.சி.பி நம்பிக் கொண்டிருக்க, நாங்களும் அதுக்குதான் ஆட்டத்துல இருக்கோம் என்று புள்ளிப் பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் ஒன்றை விட்டுக்கொடுக்காத பஞ்சாப் கிங்ஸும் தவறாமல் போட்டிக்கு வருகிறது.

Punjab Kings
Punjab Kings

ஆனால், இம்முறை கடந்த ஆண்டு கொல்கத்தாவுக்குக் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரின் தலைமை, மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸின் கம்பேக், சஹால் - அர்ஷ்தீப் கூட்டணி, 2024 சீசனில் ரூ. 20 லட்சத்துக்குத் தவறாக ஏலத்தில் எடுத்து இப்போது தவிர்க்க முடியாத வீரராக ரூ. 5.50 கோடிக்குத் தக்கவைக்கப்பட்ட மிடில் ஆர்டர் நம்பிக்கை ஷஷாங்க் சிங் என டஃப் கொடுக்கும் அணியாகக் காட்சியளிக்கிறது பஞ்சாப் கிங்ஸ் அணி.

இந்த நிலையில், ஷஷாங்க் சிங் யாருடைய கேப்டன்சியில் தான் விளையாட ஆர்வமாக இருக்கிறார் என்பதைத் தெரிவித்திருக்கிறார். யூடியூப் சேனல் நிகழ்ச்சியொன்றில் பேசிய ஷஷாங்க் சிங், "ரோஹித் தனது வீரர்களை சப்போர்ட் செய்வதாகவும், நிறைய வாய்ப்புகள் கொடுப்பதாகவும் எல்லோரும் கூறுகின்றனர். அவர் ஸ்மார்ட்டான கேப்டன்.

ஷஷாங்க் சிங்
ஷஷாங்க் சிங்

யாருடைய கேப்டன்சியின் கீழ் நீங்கள் விளையாட வேண்டும் என்று என்னை நீங்கள் கேட்டால், அது நிச்சயம் ரோகித் சர்மாவாகத்தான் இருக்கும். அவர் மும்பையைச் சேர்ந்தவர். அவருடன் ஒருமுறை இணைந்து விளையாடியிருக்கிறேன். ஆனால், அப்போது அவர் கேப்டன் இல்லை. எனவே, அவருடைய கேப்டன்சியில் நான் விளையாட விரும்புகிறேன். அதுவே என் விருப்பம்" என்று கூறினார்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Sourav Ganguly: அதிரடி போலீஸ் கெட்டப்பில் டாடா... வெப் சீரிஸில் நடிக்கிறாரா சௌரவ் கங்குலி?

'தி காக்கி: தி பெங்கால் சாப்டர்' படத்தின் புரோமோ வீடியோவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலியைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் ஆச்சரியத்தைப் பகிர்ந்து ... மேலும் பார்க்க

IPL 2025: "தங்கம் சார்..." - ஸ்டெயின், பாண்ட் சொல்லும் சமகால சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் யார்?

ஐ.பி.எல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒருவாரம் கூட முழுமையாக இல்லை. இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என அனைத்து வீரர்களும் தங்கள் ஐ.பி.எல் அணிகளுடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இன... மேலும் பார்க்க

Pakistan: '804' என்ற எண்ணால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 1.4 மில்லியன் அபராதம்; பின்னணி என்ன?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான அமீர் ஜமால், தனது டெஸ்ட் தொப்பியில் '804' என்ற எண்ணை எழுதியதற்காக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பில் அவருக்குச் சுமார் 1.4 மி... மேலும் பார்க்க

Kohli: `அழுத்தமான சூழலில் குடும்பத்தினருடன் இருக்க வேண்டும்...' - பிசிசிஐ கட்டுப்பாடு குறித்து கோலி

இந்திய அணி வீரர்கள் இனி வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு குடும்பத்தினரை அழைத்துச் செல்லக்கூடாது என பிசிசிஐ சமீபத்தில் ஒரு விதியை அமல்படுத்தியிருந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அண... மேலும் பார்க்க

Dhoni : 'நான் செய்த மிகப்பெரிய தவறு அது..!'- தோனி குறிப்பிட்ட அந்த ஐ.பி.எல் சம்பவம்!

இந்திய அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவர் தோனி. 3 ஐசிசி கோப்பைகள், 5 ஐபிஎல் கோப்பைகளை அணிக்காக வென்று கொடுதித்திருக்கிறார். தோனியின் அடையாளமே அவர் களத்தில் எப்போதும் அமைதியாக இருந்து தனது திட்டத்தை நக... மேலும் பார்க்க

WPL : 'தொடர்ச்சியாக மூன்று இறுதிப்போட்டிகளில் தோல்வி'- மனமுடைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் மெக் லேனிங்

வுமன்ஸ் ப்ரீமியர் லீகின் இறுதிப்போட்டியில் மும்பைக்கு எதிராக டெல்லி அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்று சீசன்களில் இறுதிப்போட்டியில் தோற்றிருக்கி... மேலும் பார்க்க