செங்கம் கோயிலில் நந்தீஸ்வரா் மீது சூரிய ஒளி பட்டு பொன்னிறமாக மாறும் நிகழ்வு
Kohli: `அழுத்தமான சூழலில் குடும்பத்தினருடன் இருக்க வேண்டும்...' - பிசிசிஐ கட்டுப்பாடு குறித்து கோலி
இந்திய அணி வீரர்கள் இனி வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு குடும்பத்தினரை அழைத்துச் செல்லக்கூடாது என பிசிசிஐ சமீபத்தில் ஒரு விதியை அமல்படுத்தியிருந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து பிசிசிஐ இந்த விதியை அமல்படுத்தியிருந்தது. அதன்படி 45 நாட்கள் அல்லது அதற்கும் நீண்ட வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது மட்டுமே குடும்பத்தினர் அதிகபட்சமாக இரண்டு வாரங்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட விராட் கோலியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் , "சிறப்பாக விளையாடாத சமயங்களில் போட்டி முடிந்த பிறகு அறைக்குச் சென்று தனியாக சோகத்துடன் இருக்க விரும்பவில்லை. அழுத்தமான சூழலில் குடும்பத்தினருடன் இருக்கும்போதுதான் அத்தகைய ஏமாற்றத்தில் இருந்து எங்களால் வெளிவர முடியும். வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் தங்கியிருப்பதன் மூலம் கிடைக்கும் மதிப்பை யாரும் புரிந்துக்கொள்ள மாட்டார்கள்" என்று கூறியிருக்கிறார்.