போலி வாக்காளா் அட்டை மீதான விவாதத்துக்கு மறுப்பு: மாநிலங்களவையிலிருந்து எதிா்க்க...
Sourav Ganguly: அதிரடி போலீஸ் கெட்டப்பில் டாடா... வெப் சீரிஸில் நடிக்கிறாரா சௌரவ் கங்குலி?
'தி காக்கி: தி பெங்கால் சாப்டர்' படத்தின் புரோமோ வீடியோவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலியைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் ஆச்சரியத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, வரவிருக்கும் 'காக்கி: தி பெங்கால் சாப்டர்' தொடருக்கான புரோமோவில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் வருகிறார்.
கங்குலிக்காக நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டுள்ள நகைச்சுவையான புரோமோஷன் வீடியோவில், ஆஸ்திரேலிய வீரரும் முன்னாள் இந்தியப் பயிற்சியாளருமான கிரெக் சேப்பல் இடம்பெற்றுள்ளார்.
Sourav Ganguly புரொமோஷன்!
இன்று வெளியான புரோமோவில், 'காக்கி: தி பெங்கால் சாப்டர்' தொடரின் குழுவினர் அவரது கதாபாத்திரத்தை விளக்குவதாகக் காட்சிகள் இடம்பெற்றன.
காவலர்கள் லத்தியில் அடிப்பதுபோல தனது கிரிக்கெட் ஷாட்களை ஆடினார் கங்குலி. அனைத்து 8 விநாடிக்குள் அடிக்க இயக்குநர் கேட்டதனால், பிரோமோவின் பாதியிலேயே கங்குலி நடிக்கும் ஆசையைக் கைவிடுகிறார். பின், அவரைத் தொடரை புரோமோஷன் செய்ய ஒத்துக்கொள்ள வைக்கின்றனர்.
இந்த புரோமோ மூலம் கங்குலி தொடரில் இல்லை என்றாலும் அதனை புரொமோட் செய்ய இணைந்துள்ளார் எனத் தெரிவிக்கிறது. என்னவானாலும் கங்குலியை இப்படிப் பார்ப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Khakee: The Bengal Story
காக்கி: தி பெங்கால் சாப்டர் தொடரில் ஜீத் மத்னானி, ப்ரோசென்ஜித் சாட்டர்ஜி, சாஸ்வத சாட்டர்ஜி மற்றும் பரம்பிரதா சாட்டர்ஜி ஆகியோர் நடிக்கின்றனர். கொல்கத்தாவில் 2000களில் நடப்பதாகக் கதைகளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் வருகின்ற மார்ச் 20ம் தேதி நெட்ஃளிக்ஸில் வெளியாகவிருக்கிறது.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks