செய்திகள் :

Virat Kohli: "சாம்பியன்ஸ் டிராபி வெற்றியை சோசியல் மீடியாவில் பகிராதது ஏன்?" - கோலி விளக்கம்

post image

2025ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தயாரிப்புகள் மிகவும் விமரிசையாக நடந்துவருகின்றன. கிட்டத்தட்ட அனைத்து வீரர்களும் தங்களது அணியினருடன் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். நேற்று ஆர்சிபி அணியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய விராட் கோலி சமூக வலைத்தள பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டது குறித்துப் பேசியுள்ளார்.

சாதனைகளுக்காக அல்ல; விளையாட்டின் மீதான காதலுக்காக...

முன்னதாக விராட் கோலியின் ஓய்வு பற்றி எழும் வதந்திகளுக்கு முடிவு கட்டும் விதமாக, தற்போது தனது மனதில் ஓய்வு பற்றிய சிந்தனை இல்லை எனக் கூறியுள்ளார் விராட்.

சாம்பியன்ஸ் டிராபி 2025 வெற்றிக்குப் பிறகு, விராட் கோலி 2027 தென்னாப்பிரிக்கா உலகக் கோப்பையில் பங்கேற்பதற்கு ரசிகர்களிடம் ஆதரவு பெருகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது ஐபிஎல் தொடருக்காகத் தயாராகிவரும் விராட் கோலி, தனது கரியரின் முக்கியமான இந்த கட்டத்தில், சாதனைகளை நோக்கி அல்லாமல், விளையாட்டை நேசித்து விளையாடுவதாகக் கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்கள் பற்றி Virat Kohli...

முன்னதாக ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துவந்த கோலி, தற்போது ஆன்லைனில் மிகவும் குறைவாகச் செயல்படுகிறார். இதற்கான முக்கிய காரணமாகத் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்காற்றவில்லை எனக் கூறியுள்ளார்.

விராட் கோலிக்கு இன்ஸ்டாகிராமில் 270 மில்லியன் ஃபாலோவர்கள் உள்ளனர், எக்ஸ் தளத்தில் 66.1 மில்லியன் ஃபாலோவர்கள் உள்ளனர். சமீப காலமாக அவரது சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் பற்றிய பதிவுகளை விட விளம்பரங்களே அதிகம் பதிவிடப்படுகின்றன.

Virat Kohli in AD

சாம்பியன்ஸ் டிராபி வெற்றியைக் கூட அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிடாமல், விளம்பரங்களைப் பகிர்ந்தது ரசிகர்களிடம் கேள்வியை எழுப்பியது.

இதுகுறித்து, "நான் சமூக வலைத்தளங்களில் பதிவிடாததற்குக் காரணம், எந்த குறிக்கோளும் இல்லாமல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது அழிவுகரமானது. சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது என் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மக்களின் கமெண்ட்கள் என்னிடம் எந்த ரியாக்‌ஷனையும் வரவழைப்பதில்லை என்பதால் நான் எதையும் பதிவிடவும் அவசியமில்லை" எனக் கூறியுள்ளார்.
விராட் கோலி

2025 ஐபிஎல்லின் முதல் போட்டியில் ஆர்.சி.பி அணி, நடப்பு சாம்பியனான கே.கே.ஆர் அணியுடன் வரும் 22ம் தேதி மோதுகிறது. விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாகச் செயல்பட்டதால் வழக்கம் போல் ரசிகர்களுக்கு அவரிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. புதிய கேப்டனின் (ரஜத் படிதர்) கீழ் விளையாடப்போகும் விராட் தனது அனுபவத்தின் மூலம் அணிக்குத் தூணாக விளங்குவார் என்கின்றனர் கிரிக்கெட் வல்லுநர்கள்!

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

WPL : 'தொடர்ச்சியாக மூன்று இறுதிப்போட்டிகளில் தோல்வி'- மனமுடைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் மெக் லேனிங்

வுமன்ஸ் ப்ரீமியர் லீகின் இறுதிப்போட்டியில் மும்பைக்கு எதிராக டெல்லி அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்று சீசன்களில் இறுதிப்போட்டியில் தோற்றிருக்கி... மேலும் பார்க்க

Raina: `Mr.IPL பட்டம் ஒன்னும் சும்மா கொடுக்கல' - ரெய்னாவின் அந்த ஆட்டம் நினைவிருக்கிறதா?

கடந்த 17 சீசன்களில் ஐ.பி.எல் எவ்வளவோ மாற்றங்களை பார்த்துவிட்டது. சீசனுக்கு சீசன் பேட்டர்கள் அதிரடியாக ஆடும் வேகம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த சீசனில் ஹெட்டும் அபிஷேக்கும் சேர்ந்து சன்ரைசர்ஸூ... மேலும் பார்க்க

Virat Kohli: "பதட்டப்படாதீர்கள்... ஓய்வு பெறுவதற்கான நேரம்..." - விராட் கோலி பேசியது என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களுள் ஒருவர் விராட் கோலி. 36 வயதாகும் இவர் ஏற்கெனவே சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், மற்றொரு ஆஸ்திரெலிய டூர் தனக்குச் சாத்தியப்படாம... மேலும் பார்க்க

WPL 2025: இறுதிவரைப் போராடிய டெல்லி கேபிடல்ஸ் வீராங்கனைகள்... மீண்டும் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ்!

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அ... மேலும் பார்க்க

Varun Chakravarthy: "போனில் மிரட்டல்கள் வந்தன" - கரியரின் இருண்ட காலம் குறித்து மனம் திறந்த வருண்!

இந்திய கிரிக்கெட் அணியின் சிறப்புவாய்ந்த ஸ்பின் பௌலர் வருண் சக்கரவர்த்தி. கடந்த 2021ம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை போட்டியில் சரியாக செயல்படாததால் எதிர்கொண்ட மிரட்டல் அழைப்புகள் மற்றும் அதனால் ஏற்பட்ட... மேலும் பார்க்க

IPL 2025: கடந்த 10 ஆண்டுகளில் அதிக முறை ஆரஞ்சு கேப் வென்ற வீரர்கள்... முதலிடத்தில் `UNSOLD’ வீரர்!

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடங்கப்பட்ட பிறகு பிறந்த 13 வயது வைபவ் சூர்யவன்ஷியின் அறிமுகம் முதல் அன்கேப்பட் பிளேயராக களமிறங்கும் தோனி வரை பல்வேறு சுவாரஸ்யங்களுக்... மேலும் பார்க்க