செய்திகள் :

பாஜக எம்எல்ஏ மனைவி புகார்: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளார் கைது!

post image

அஸ்ஸாம் பாஜக எம்எல்ஏ மானவ் தேகா மனைவி அளித்த புகாரின் பேரில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கைது செய்யப்பட்டார்.

அஸ்ஸாம் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரீத்தம் சிங் தனது எக்ஸ தளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார்.

அதில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 3 பேரின் புகைப்படங்களைப் பகிர்ந்து இவர்களுக்குக் கிடைத்ததைப் போன்று பாஜகவைச் (பாஜக எம்எல்ஏ மானவ் தேகா உள்பட 3 பேரி) சேர்ந்த பாலியல் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கிடைக்கும். சட்டம் அனைவருக்கும் சமமானதா? என்று கேள்வி எழுப்பிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ரீத்தம் சிக் மீது லட்சுமிபூர் காவல்துறையில் மானவ் தேகாவின் மனைவி ராஜஸ்ரீ தேகா புகாரளித்தார். அவர்மீது மானநஷ்ட வழக்கு மற்றும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் அஸ்ஸாம் காவல்துறையால் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டம் பதியப்பட்டதற்கானன் காரணம் பற்றிக் கேட்டபோது, பட்டியலினத்தைச் சேர்ந்த தனது மனைவி அந்தப் பதிவால் பாதிக்கப்பட்டதாக மானவ் தேகா குறிப்பிட்டார்.

கௌஹாத்தி உயர் நீதிமன்ற வழக்குரைஞரான ரீத்தம் சிங் பாஜகவை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வந்தார். அவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் காவல்துறையை அஸ்ஸாம் அரசு தவறாகப் பயன்படுத்துவதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

இதையும் படிக்க | தப்பிக்க முயன்ற பாலியல் வன்கொடுமை குற்றவாளி: போலீஸ் துப்பாக்கிச்சூடு!

"முதல்வர் ஹிமாந்த விஸ்வ சர்மாவின் கீழ் காவல்துறை தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து அமித் ஷாவுக்கு தெரியுமா? அசாம் காவல்துறையை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள். இது தவறான குற்றச்சாட்டு” என காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகாய் தெரிவித்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட ராஜஸ்ரீ தேகா, “நான் ஒரு பெண், மனைவி, சகோதரி, தாய் மற்றும் பட்டியலினைதை சேர்ந்தவள். நான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளேன். பொறுப்பான பதவிகளில் இருக்கும் என் கணவரை ‘பாலியல் வன்கொடுமை குற்றவாளி’ என்று கூறுவது எவ்வளவு கொடுமையானது” என்று அவர் குறிப்பிட்டார்.

ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்கள் கவனத்திற்கு...

இணையதளப் பக்கங்களில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் பல்வேறு வகைகளில் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் உணவுப் பொருள்கள் விநியோக சேவையில் ஈடுபட்டுவரும் பிளி... மேலும் பார்க்க

பணத்தைத் திருப்பிக்கொடு! மோசடியாளரையே ஏமாற்றிக் கதறவிட்ட இளைஞர்!!

சிபிஐ அதிகாரி என்று கூறி ஆன்லைன் மோசடியில் ஈடுபட முயன்ற நபரையே ஏமாற்றி, ரூ.10,000 பறித்த கான்பூர் இளைஞர் பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கிறது.கான்பூரைச் சேர்ந்த பூபேந்திர சிங் என்ற இளைஞருக்கு, சிபிஐ அத... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலரின் வரலாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டது: மத்திய அமைச்சர்

சுதந்திர போராட்ட வீரர்கள் பலரின் தியாகங்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டதாக மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங... மேலும் பார்க்க

வாக்காளர் குளறுபடி, தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க மறுப்பு! எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

வாக்காளர் அடையாள அட்டை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் செய்த குளறுபடி, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிந... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: வைக்கோல் தீப்பிடித்ததில் 4 சிறுவர்கள் பலி

ஜார்க்கண்டில் வைக்கோல் குவியல் தீப்பிடித்ததில் 4 சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட், மாநிலம், மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள வீட்டிற்கு அருகிலிருந்த வைக்கோல் குவியல் த... மேலும் பார்க்க

விண்வெளி விஞ்ஞானியாவது எப்படி? யாரெல்லாம் ஆக முடியும்?

விண்வெளி விஞ்ஞானி என்ற பணி பெயரையும் புகழையும் நல்ல சம்பளத்தையும் கொடுத்தாலும் எல்லோராலும் விண்வெளி விஞ்ஞானி ஆகிவிட முடியாது. அந்தப் பணியில் ஏகப்பட்ட ஆபத்துகள் இருந்தாலும், அதி தீவிர உடல் பாதிப்புகள்,... மேலும் பார்க்க