தினமணி செய்தி எதிரொலி: அரக்கோணம் புறவழிச் சாலையில் வேகத்தடைகள் அமைப்பு
Sunita Williams: பூமிக்கு திரும்பும்போது உடம்பில் இந்த பாதிப்புகள் ஏற்படலாம்... நாசா சொல்வதென்ன?
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் (Sunita Williams and Barry Butch Wilmore) சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்குத் திரும்ப ஆவலாக உள்ளனர். அவர்கள் நீண்ட நாள்கள் விண்வெளியில் இருந்ததால், பூமிக்குத் திரும்பும்போது பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக வாய்ப்புகள் உள்ளன.
கிட்டத்தட்ட 9 மாதங்கள் விண்வெளியில் வாழும் சுனிதா வில்லியம்ஸ், நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் இணைந்து மேற்கொள்ளும் மேற்கொள்ளும் திட்டத்தின் மூலம் பூமிக்கு மீண்டும் அழைத்துவரப்படவுள்ளார். மார்ச் 19-ம் தேதி விண்வெளி வீரர்கள் இருவரும் பூமியை வந்தடைவார்கள்.

விண்வெளியில் ஈர்ப்புவிசை இருக்காது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு உள்ளேயும் மிகவும் குறைவான ஈர்ப்புவிசையே உள்ளது. பூமிக்கு திரும்பும் போது ஏற்படும் ஈர்ப்புவிசை மாற்றத்தை உடல் ஏற்றுக்கொண்டு சமநிலைக்குத் திரும்ப சில நாள்கள் ஆகலாம்.
Baby feet
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்குத் திரும்பிய பிறகு நடப்பதற்கு மிகவும் சிரமப்படலாம் எனக் கூறப்படுகிறது. விண்வெளியில் இருந்த எடையற்றத் தன்மையால் நம் பாதம் மற்றும் உள்ளங்கையில் இருக்கும் உரத்த பகுதியை (கால்சஸ்) இழக்க நேரிடும். இந்த நிலைக்கு Baby feet என்று பெயர்.
எலும்பின் அடர்த்தி மற்றும் தசை இழப்பு
சுனிதா வில்லியம்ஸ் மிகவும் மெலிந்து காணப்படுவதை புகைப்படங்களில் பார்த்திருப்போம். விண்வெளியில் நீண்ட நாள்கள் இருப்பவர்களுக்கு எலும்பின் அடர்த்தி குறையும் மற்றும் தசையை இழந்து மெலியும் நிலை ஏற்படும்.
இதற்கும் புவியீர்ப்பு விசை இல்லாமல் இருப்பதுதான் காரணம். புவியீர்ப்பு விசையால் நம் உடலில் ஏற்படும் அழுத்தம் இல்லாத சூழலில் எலும்பு மற்றும் தசை நலிவடைவதைத் தடுக்க நாம் அதிகப்படியான உடற்பயிற்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இதற்காக விண்வெளி வீரர்கள் தினசரி குறிப்பிட்ட நேரத்தில் உடற்பயிற்சிகளை மேற்கொள்வர். முறையான உடற்பயிற்சிகள் இல்லாவிட்டால், பூமிக்குத் திரும்பும்போது தீவிரமான பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்.
விண்வெளியில் எலும்பு திசுக்கள் சுற்றுப்புறத்துக்கு ஏற்ப மறுசீரமைப்பு அடையும். புதிய எலும்பு திசுக்களை உருவாக்கும் செல்களின் வேகம் குறைந்துவிடும். ஆனால் பழைய எலும்பு திசுக்கள் இழப்பு எந்தஎந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து நடைபெறும். இந்த சீரற்ற நிலையால் எலும்புகள் வலுவிழக்கும்.
ஒவ்வொரு மாதமும் விண்வெளி வீரரின் எலும்புகளின் அடர்த்தி 1 விழுக்காடு குறையும். அடர்த்தி குறைந்த எலும்புகள் பலவீனமாகவும் எளிதில் உடையக் கூடியதாகவும் இருக்கும். மீண்டும் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் இதன் விளைவுகளைச் சந்திக்கவும் சரிசெய்யவும் வேண்டியிருக்கும் என்று நாசா கருதுகிறது.
இதயம் மற்றும் மூளை நலன்
மனித உடலின் மூளை, இதயம் மற்றும் சுவாச மண்டலத்தையும் விண்வெளி பயணம் பாதிக்கும். மூளையில் திரவங்களின் உற்பத்தி அதிகரிப்பதனால் கேட்கும் திறன், பார்க்கும் திறனை இழக்க நேரிடலாம். அல்லது பெருமூளை வீக்கம் ஏற்படலாம்.
விண்வெளி பயணத்துக்குப் பிறகு மூளையில் அழுத்தம் அதிகரிப்பதனால் ஏற்படும் குறைபாட்டுக்கு Spaceflight Associated Neuro-ocular Syndrome (SANS) எனப் பெயரிட்டுள்ளது நாசா.

பொதுவாக ஓவல் வடிவத்தில் இருக்கும் மனித இதயம் விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாததால் வட்ட வடிவத்துக்கு மாறுகிறது, இரத்தநாளங்கள் சுருங்குகிறது, இதனால் இரத்த ஓட்ட அமைப்பு சேதமடைய வாய்ப்பு உள்ளது.
பூமிக்கு திரும்பும்போது ஏற்படும் இரத்த அழுத்த மாறுபாட்டால் தலைசுற்றல், குமட்டல் மற்றும் மயக்கம் ஏற்படலாம்.
விண்வெளி கதிர்வீச்சு
விண்வெளி பயணத்தின்போது கதிர்வீச்சு தாக்கத்துக்கு ஆளாகியிருந்தால், நீண்டகால பிரச்னைகள் ஏற்படலாம். புற்றுநோய் மற்றும் நரம்புமண்டல பிரச்னைகள் ஏற்படலாம்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks