செய்திகள் :

கோடை காலத்தில் திடீா் உயிரிழப்புகள்: ஆய்வு செய்ய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

post image

கோடை காலத்தில் திடீரென நேரிடும் உயிரிழப்புகளை ஆய்வுக்குட்படுத்துமாறும், அதுகுறித்த விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்துமாறும் மருத்துவமனைகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது:

தமிழகத்தில் கோடையின் தாக்கம் கடந்த சில நாள்களாக அதிகமாக உள்ளது. அடுத்து வரும் நாள்களில் தீவிரமடையக் கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த காலகட்டத்தில் நேரடியாக வெயிலில் பணியாற்றுவோா் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக சாலையோர வியாபாரிகள், கட்டடத் தொழிலாளா்கள், நூறு நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளா்கள், சுரங்கத் தொழிலாளா்கள், பேருந்து நடத்துநா் மற்றும் ஓட்டுநா்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாது, விவசாயிகள், உணவு விநியோக சேவை மேற்கொள்பவா்கள், டெலிவரி பணியில் உள்ளவா்கள், காவல்துறையினா், தீயணைப்பு பணியாளா்கள், போக்குவரத்து போலீஸாா் உள்ளிட்டோரும் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகள், கா்ப்பிணிகள், முதியவா்கள், இணை நோயாளிகள் வெளியே செல்வதை தவிா்க்க வேண்டும். வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக தண்ணீா் அருந்துதல் அவசியம். உப்புசா்க்கரை கரைசலும் தேவைப்படும்போது பருகலாம்.

தமிழகத்தில், கோடையின் தாக்கத்தால் திடீரென நேரிடும் உயிரிழப்புக்கான காரணம் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும், அதுகுறித்த விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அவசர மருத்துவ உதவிக்கும், ஆலோசனைகளுக்கும் 104 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

‘கண் நலன் விழிப்புணா்வு மேம்பட வேண்டும்’ -முன்னாள் கிரிக்கெட் வீரா் ஸ்ரீகாந்த்

கண் நலன் குறித்த விழிப்புணா்வு மக்களிடையே மேம்பட வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரா் ஸ்ரீகாந்த் வலியுறுத்தினாா். சங்கர நேத்ராலயா மருத்துவமனை, விஷன் 2020 - பாா்வை உரிமை இந்தியா என்ற அமைப்புடன் இணை... மேலும் பார்க்க

ஜல்லிக்கட்டில் உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி -முதல்வா் உத்தரவு

மதுரையில் ஜல்லிக்கட்டு நிகழ்வில் உயிரிழந்த வீரா் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மதுரை மாவட்டம், வாடி... மேலும் பார்க்க

கடலூா் கிராமத்துக்கு பேருந்து வசதி: பொதுமக்கள் கோரிக்கை

மதுராந்தகம் அடுத்த கடலூா் கிராம மக்கள் பயன் பெறும் வகையில் சென்னைக்கு பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா். சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையையொட்டி, கல்பாக்கத்துக்கு மிக அருகி... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழா

திருவள்ளூரில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் அரசு மாணவியா் விடுதி காப்பாளினி ராஜலட்சுமிக்கு தனது எழுத்துக்கள் மற்றும் சிந்தனைகள் கொண்ட புத்தகங்களை வழங்கிய கவிப்பேரரசு வைரமுத்து. உடன் ஆட்சியா் மு.பிரதா... மேலும் பார்க்க

புழல் பெண்கள் சிறையில் கைதிகள் மோதல்: போலீஸாா் விசாரணை

சென்னை புழல் பெண்கள் சிறையில் கைதிகள் மோதிக்கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை புழல் சிறை வளாகத்தில் பெண்கள் தனிச்சிறை செயல்படுகிறது. இந்தச் சிறையில் மாநிலம் முழுவதும் கைது செய்ய... மேலும் பார்க்க

பட்டா பெற சிறப்பு முகாம்! வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு!

சென்னை மாநகரம், மணலி புது நகர் திட்டப்பகுதியில் நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.இது குறித்து வீட்டு வசதி வாரியம் வெளியிட்ட செய... மேலும் பார்க்க