செய்திகள் :

Nayanthara: 7000 சதுர அடி; நயன்தாரா - விக்னேஷ் சிவன் தொடங்கிய பிரமாண்ட ஸ்டூடியோ

post image

நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் சேர்ந்து புதிதாக ஸ்டூடியோ ஒன்றைத் தொடங்கி இருக்கின்றனர்.

நயன்தாரா நடிப்பில் தற்போது 'டெஸ்ட்' படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் சித்தார்த், மாதவன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து 'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் நடிக்க இருக்கிறார்.

நயன்தாரா

கடந்த 20 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வரும் நயன்தாரா, சினிமாவைத் தாண்டி பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள், நாப்கின் தயாரித்தல் உள்ளிட்ட சில தொழில்களை தொடங்கி நடத்தி வருகிறார். அது மட்டுமின்றி ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் படங்களைத் தயாரித்தும் வருகிறார்.

இந்நிலையில் தற்போது சென்னை தேனாம்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள தங்களது பங்களாவை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஹோம் ஸ்டூடியோவாக மாற்றி இருக்கிறார்கள். இது தொடர்பான புகைப்படத்தையும், வீடியோவையும் சமூக வலைதளங்களில் இருவரும் பகிர்ந்திருக்கின்றனர்.

7000 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த ஸ்டூடியோவை நிகிதா ரெட்டி என்பவர் சிறப்பான உள் கட்டமைப்புடன் கைவினைப் பொருட்களால் பிரமாண்டமாக வடிவமைத்திருக்கிறார். இந்த ஸ்டூடியோ தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Bindhu Ghosh: பிரபல நகைச்சுவை நடிகை பிந்து கோஷ் காலமானார்

நடிகை பிந்து கோஷ் உடல்நலக் குறைவால் காலமாகி இருக்கிறார்.தமிழில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றியவர், நடிகை பிந்து கோஷ். மனோரமா, கோவை சரளா போல காமெடியில் கலக்கிய இவர் டான்ஸராகவும் படங்களில் பணிய... மேலும் பார்க்க

Holi: "ஹோலி ஹோலி பக்கத்தில் சிரிக்கும் ரங்கோலி!" - ரம்யா பாண்டியனின் ஹோலி கொண்டாட்டம் | Photo Album

ஹோலிப் பண்டிகை: தமிழர் விழாவான உள்ளி விழா! ஹோலியானதா!வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 | Part 02: https://tin... மேலும் பார்க்க

"உண்மையான தென்னிந்தியாவை இங்குப் பார்க்கிறேன்" - மும்பை விழாவில் விருது பெற்ற சுஹாசினி பெருமிதம்

மும்பை செம்பூரில் உள்ள பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது நேற்று இரவு நடந்... மேலும் பார்க்க

AR Rahman: "டிஸ்சார்ஜ் செஞ்சாச்சு..." - ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அறிக்கை

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நிலை கோளாறு காரணமாகச் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நீரிழப்பு (Dehydration) காரணமாக உடல்நிலை கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது நலமு... மேலும் பார்க்க

AR Rahman: `அப்பா நலமாக இருக்கிறார்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஹ்மான் குறித்து அமீன்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலையிலிருந்தே இதுகுறித்த செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், மருத்துவமனை தரப்பிலிருந்த... மேலும் பார்க்க