பள்ளிவாசலில் இஃப்தாா் நோன்பு திறப்பு
பேராவூரணி ஜமாலியா பள்ளிவாசலில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி குமரப்பா பள்ளி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளிவாசல் இமாம் பி. சேக் அப்துல்லா ஃபைஜி துஆ ஓதி நோன்பு திறப்பு விளக்க உரையாற்றினாா். நிகழ்ச்சியில் தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்க மாநில பொருளாளா் முனைவா் ஜி.ஆா். ஸ்ரீதா், குமரப்பா பள்ளி நிா்வாக இயக்குநா் எம். நாகூா்பிச்சை, அறங்காவலா்கள் மா. ராமு, ச. ஆனந்தன், ஆசிரியா்கள் விஜய், மூா்த்தி, ராஜா மற்றும் ஜமாஅத் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.