Modi: ``வறுமை, பாகிஸ்தான், விரதம்...'' - பர்சனல் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
மாட்டு வண்டி எல்கை பந்தயம்
தமிழக முதல்வா் பிறந்த நாளையொட்டி, திருவையாறு அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவையாறு திமுக தெற்கு ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன் தலைமை வகித்தாா். தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி முன்னிலை வகித்தாா்.
திருவையாறு அருகே கண்டியூா் புறவழிச் சாலையில் 8 மைல், 6 மைல், 5 மைல் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, நடத்தப்பட்ட இப்போட்டியில் மொத்தம் 32 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், திமுக திருவையாறு தெற்கு ஒன்றியச் செயலா் கௌதமன், திருவையாறு நகராட்சி துணைத் தலைவா் நாகராஜன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் கோ. அரசாபகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் க. முகில்வேந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.