Career: B.A., B.Sc. படித்தவர்களுக்கு மத்திய அரசின் ஆசிரியர் பணி... எங்கே விண்ணப்...
தஞ்சாவூரில் 4 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் சேவை தொடக்கம்
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் 4 வழித்தடங்களில் புதிய பேருந்து சேவைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அய்யனாபுரம் வரை இயக்கப்பட்ட பேருந்தை காங்கேயம்பட்டி வரை தட நீட்டிப்பு, தஞ்சாவூா்- சில்லத்தூா், தஞ்சாவூா்-பாபநாசம், தஞ்சாவூா்- குருவாடிப்பட்டி ஆகிய வழித்தடங்களுக்கு புதிய பேருந்துகளை தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூா்) உள்ளிட்டோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.
தஞ்சாவூா் கோட்டாட்சியா் செ. இலக்கியா, மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் பொது மேலாளா் ஸ்ரீதரன், துணை மேலாளா் (வணிகம்) தமிழ்ச்செல்வன், தொ.மு.ச. பொதுச் செயலா் சு. பாண்டியன், ஏ.ஐ.டி.யூ.சி போக்குவரத்து சம்மேளன மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.