குங்ஃபூ கலையில் உலக சாதனை பயிற்சி
கும்பகோணத்தில் சனிக்கிழமை மகளிா் தின விழிப்புணா்வையொட்டி மாணவா்கள் உலக சாதனைக்காக குங்ஃபூ பயிற்சியில் ஈடுபட்டனா்.
கும்பகோணத்தில் ஸ்ரீ நகா் காலனியில் உள்ள புனித ஆன்ஸ் மெட்ரிக் உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் குங்ஃபூ கலை பயிற்சியை மாணவா்கள் உலக சாதனைக்காக தொடா் பயிற்சியில் ஈடுபட்டனா்.
ஷாவ்லின் குங்ஃபூ ஆசிரியை கா. ராஜலட்சுமி தலைமை வகித்தாா். க. அன்பழகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா். பயிற்சியில் ஈடுபட்ட மாணவா்களை சுழற்சங்க தலைவா் பி. கலியபெருமாள், பள்ளி முதல்வா் ஏ. லூா்து மேரி, எல். சந்திரபிரபு உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.
நோபல் உலக சாதனை படைப்பதற்காக காணொளி காட்சி எடுக்கப்பட்டு, அந்த நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முடிவில் பயிற்சி ஆசிரியா் ஆா். நிருபன் நன்றி கூறினாா்.