சூப்பர் அறிவிப்பு... 7,783 அங்கன்வாடி பணியாளா், உதவியாளா் பணி: தமிழக அரசு அறிவிப...
மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!
மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் பிலானி, 1953 ஆம் ஆண்டு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் நிறுவப்பட்ட மின்னணு துறையில் ஒரு முதன்மையான ஆராய்ச்சி நிறுவனமாகும். இது மின்னணு துறைகளில் பல துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் சென்னை மற்றும் ஜெய்ப்பூரில் மையங்களையும் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள ஸ்டெனோ மற்றும் செக்ரட்டரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண். 01/2025
பணி: Junior Stenographer
காலியிடங்கள்: 2
தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Junior Secretariat Assistant
காலியிடங்கள்: 4
பிரிவு: General
காலியிடங்கள்: 4
பிரிவு: Finance & Accounts
காலியிடங்கள்: 2
பிரிவு: Stores & Purchase
காலியிடங்கள்: 2
தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் கணினியில் தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுகள் குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. கட்டணத்தை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.ceeri.res.in என்ற இணையதளம் மூலம விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 18.03.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.