செய்திகள் :

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு 149 ரன்கள் இலக்கு!

post image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்துள்ளது.

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி ராய்பூரில் இன்று (மார்ச் 16) நடைபெற்று வருகிறது. இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.

இதையும் படிக்க: தில்லி கேபிடல்ஸின் கேப்டன் அக்‌ஷர் படேல் குறித்து மனம் திறந்த அபிஷேக் போரெல்!

இந்தியாவுக்கு 149 ரன்கள் இலக்கு

முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக லெண்டல் சிம்மன்ஸ் அதிகபட்சமாக 41 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டுவைன் ஸ்மித் 45 ரன்களும், தினேஷ் ராம்தின் 12 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை.

இந்தியா தரப்பில் வினய் குமார் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நதீம் 2 விக்கெட்டுகளையும், நெகி மற்றும் பின்னி தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதையும் படிக்க:ரஞ்சி கோப்பை அதிரடியை ஐபிஎல் தொடரிலும் தொடர காத்திருக்கும் கருண் நாயர்!

149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா மாஸ்டர்ஸ் அணி விளையாடி வருகிறது.

இந்திய அணி பாகிஸ்தானை விட சிறந்த அணி: பிரதமர் மோடி

இந்திய அணி பாகிஸ்தானை விட சிறந்த அணி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாட்காஸ்டர் லெக்ஸ் பிரிட்மேனிடம் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி இதனைத் தெரிவித்தார்.இதை... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸின் கேப்டன் அக்‌ஷர் படேல் குறித்து மனம் திறந்த அபிஷேக் போரெல்!

தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக அக்‌ஷர் படேல் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து அபிஷேக் போரெல் பேசியுள்ளார்.ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொ... மேலும் பார்க்க

ரஞ்சி கோப்பை அதிரடியை ஐபிஎல் தொடரிலும் தொடர காத்திருக்கும் கருண் நாயர்!

உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயர் ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. ரஞ்சி தொடரில் விதர்பா அண... மேலும் பார்க்க

சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் போட்டி குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரர்!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசியுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் த... மேலும் பார்க்க

இந்திய அணி வீரர்களுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பயணிப்பது சரியா? விராட் கோலி பதில்!

இந்திய அணி வீரர்கள் கிரிக்கெட் தொடர்களுக்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அவர்களுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பயணிப்பது குறித்து இந்திய அணியின் விராட் கோலி பேசியுள்ளார்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரா... மேலும் பார்க்க

பிசிசியின் விதிமுறைகள் வருத்தமளிக்கின்றன: விராட் கோலி

குடும்பங்களுடன் கிரிக்கெட் விளையாடுவதை விராட் கோலி ஆதரித்து பேசியுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்படுவதை தடுக்கும் வகையிலும், அணியில் ஒழுக்கம், ஒற்றுமை ஆக... மேலும் பார்க்க