கச்சத்தீவு திருவிழா நிறைவு: மீன்பிடிக்க கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்
தில்லி கேபிடல்ஸின் கேப்டன் அக்ஷர் படேல் குறித்து மனம் திறந்த அபிஷேக் போரெல்!
தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக அக்ஷர் படேல் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து அபிஷேக் போரெல் பேசியுள்ளார்.
ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது.
ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்ஷர் படேல் தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இதையும் படிக்க: ரஞ்சி கோப்பை அதிரடியை ஐபிஎல் தொடரிலும் தொடர காத்திருக்கும் கருண் நாயர்!
மகிழ்ச்சியில் அபிஷேக் போரெல்
விரைவில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக அக்ஷர் படேல் நியமிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக அந்த அணி வீரர் அபிஷேக் போரெல் பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த ஆண்டு தில்லி கேபிடல்ஸ் அணியின் துணைக் கேப்டனாக அக்ஷர் படேல் செயல்பட்டது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. அக்ஷர் படேலுடன் அணி வீரர்கள் ஆலோசனை மேற்கொள்வோம். அப்போதைய கேப்டன் ரிஷப் பந்த்தும் அக்ஷர் படேலுடன் ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பார். சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் அக்ஷர் படேல் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். தற்போது, அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக செயல்பட்டதை ஐபிஎல் தொடரிலும் தொடரவுள்ளார்.
இதையும் படிக்க: இந்திய அணி வீரர்களுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பயணிப்பது சரியா? விராட் கோலி பதில்!
தில்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகத்துக்கு நான் மிகவும் நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறேன். அவர்கள் என்னுடைய திறமை மீது நம்பிக்கை வைத்து, பேட்டிங்கில் முன்வரிசையில் களமிறக்கினர். என் மீது வைத்த நம்பிக்கையின் காரணமாகவே, தில்லி அணி நிர்வாகம் என்னை தக்கவைத்தது என்றார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணி வருகிற மார்ச் 24 ஆம் தேதி அதன் முதல் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.