பயன்படுத்தப்படாத நிலத்தை 5 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பித் தர மத்திய அரசு முடிவு...
சென்னையில் தமிழிசை சௌந்தரராஜன் கைது
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தின் முன் தமிழிசை சௌந்தரராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.
டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து அதன் தலைமை அலுவலகத்தை மாா்ச் 17-இல் முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை அறிவித்திருந்தார்.
மேலும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு பதில் சொல்லும் வரை, அமைச்சா் பதவி நீக்கம் செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தின் முன் தமிழிசை சௌந்தரராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக பாஜக போராட்டத்திற்கு அனுமதி மறுத்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட தமிழிசை போராட்டத்தில் பங்கேற்க புறப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரகண்ட் நிதி அமைச்சர் ராஜிநாமா
இதற்கிடையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மக்கள் பணத்தில் முறைகேடு செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்படட வேண்டும்.
ரூ.1,000 கோடி என்பது தொடக்கம்தான். பல லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.