US Strike: 'ஏமன் மீது அமெரிக்க நடத்திய மிகப்பெரிய தாக்குதல்; 30 பேர் உயிரிழப்பு'...
பிசிசியின் விதிமுறைகள் வருத்தமளிக்கின்றன: விராட் கோலி
குடும்பங்களுடன் கிரிக்கெட் விளையாடுவதை விராட் கோலி ஆதரித்து பேசியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்படுவதை தடுக்கும் வகையிலும், அணியில் ஒழுக்கம், ஒற்றுமை ஆகியவற்றை மேம்படுத்தும் வகையிலும் புதிதாக கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதித்துள்ளது.
தலைமைப் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் பரிந்துரை அடிப்படையிலான உள்நாட்டு கிரிக்கெட்டில் கட்டாயம் விளையாடுவது, போட்டிகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் போது குடும்பத்தினருக்கு குறைந்த நாட்களே அனுமதி போன்றவை முக்கிய அம்சங்களாக உள்ளன.
இந்நிலையில் 36 வயதாகும் விராட் கோலி பேசியதாவது:
குடும்பத்தின் பங்கினை மக்களுக்கு விவரிப்பது மிகவும் கடினமானது. வெளியே எதாவது தீவிரமாக நடந்தால் நாம் குடும்பத்திடம்தாம் செல்ல வேண்டியிருக்கிறது.
குடும்பம் என்னமாதிரியான மதிப்புகளைக் கொண்டு வருகிறதென மக்களுக்கு புரியுமெனத் தெரியவில்லை.
நான் எனது அறைக்கு செல்ல விரும்பவில்லை. தனியாக உட்கார்ந்து எனது கோபத்தை வெளிக்காட்டும்படி அமைதியாக உட்காருவேன். நான் இயல்பாக இருப்பதாகக் காட்டிக்கொள்கிறேன். பிறகு உங்களது போட்டியை பொறுப்புடன் எடுத்துக்கொள்வீர்கள்.
இதை அப்படியே எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. ஆனால், உண்மையில் நீங்கள் உங்கள் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போது உங்களுக்கு குடும்பம் என்ற ஒன்று இருக்கும். ஒரு இயல்பான வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்.
அதனால், எனக்கு அதுதான் அதீத இன்பத்தைத்தரும். எனக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் குடும்பத்துடனே நேரம் செலவிட முயல்கிறேன்.
பிசிசிஐயின் இந்த முடிவு எனக்கு வருத்தமளிக்கக் கூடியதாக இருந்தது. என்ன நடந்ததோ அதற்கு காரணமே இல்லாமல் இதை விவாதத்துக்கு கொண்டுவந்துள்ளார்கள். அவர்களுக்கு குடும்பத்தை தள்ளி வைக்க வேண்டும் என்பதால் அப்படி செய்துள்ளார்கள்.
உங்களுக்கு குடும்பத்தினருடன் இருப்பது எப்போதும் பிடிக்குமா? என்று நீங்கள் எந்த வீரரையாவது கேட்டுப் பாருங்கள். அனைவரும் ‘ஆமாம்’ என்பார்கள்.
உடல்நிலை குறித்த பார்வையில் அணியின் முடிவுகள் கடினமாக இருக்காது. எனது அம்மாவை சமாதானப்படுத்துவதுதான் கடினம்.
நான் பரோட்டா சாப்பிடாமல் ஆடுகளத்தில் பலவீனமாக இருந்தாக அவர் மிகவும் வருத்தப்படுவார்.
உங்களுக்குத் தெரியுமா? என்னிடம் வெளிநாட்டு வீரர்கள் பலர் இந்தப் பயிற்சிகள் குறித்து கேட்கிறார்கள். நான் எப்படி இப்படி ஃபிட்டாக இருக்கிறேனெக் கேட்கிறார்கள். ஆனால், நீங்கள் என்னை பலவீனமாக இருப்பதாகச் சொல்லுகிறீர்களே அம்மா?. அப்படித்தான் நான் எனது அம்மாவை சமாளிப்பேன்.
நான் உடல்நிலை சரியில்லாமல் இல்லை. கவலைப்படாதீர்கள் அம்மா என்பேன். இதுதான் எனக்கு கடினம் என்றார்.