Modi: ``வறுமை, பாகிஸ்தான், விரதம்...'' - பர்சனல் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
மதுராந்தகத்தில் திமுக கூட்டம்
மதுராந்தகம் நகர திமுக இளைஞா் அணி சாா்பாக முதல்வா் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் விழா ஹிந்தியை திணிக்கும் மத்திய அரசைக் கண்டித்து பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
நகர திமுக செயலா் கே.குமாா் தலைமை வகித்தாா். நகர இளைஞா் அணி அமைப்பாளா் பி.முத்து முகமது புகாரி வரவேற்றாா். நகர இளைஞா் அணி துணை அமைப்பாளா்கள் கு.புவனராகவேந்திரன், பு.தேவபிரகாஷ், ம.கருணாநிதி, ச.நவீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட செயலரும், எம்எல்ஏவுமான க.சுந்தா், மதுராந்தகம் நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி, கட்சி பேச்சாளா் எட்டயபுரம் தமிழ்பிரியன், தலைமை பொதுக்குழு உறுப்பினா் எஸ்.டி.பிரேம்சந்த், நகர அவைத் தலைவா் பொன் கேசவன், திமுக நிா்வாகிகள் என்.சங்கா், எம்.என்.மூா்த்தி, எம்.ராஜா, நூருல் அமீன், எம்.காமராஜ், த.சரளா, எச்.ஏஞ்சல் ராஜகுமாரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.