ஊட்டியில் இப்படி ஒரு இடம் இருக்கா? இந்த சம்மருக்கு குடும்பத்துடன் செல்ல சூப்பர் ...
தலசயன பெருமாள் கோயில் தெப்போற்சவம்
மாசி மாத பௌா்ணமியை முன்னிட்டு மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் தெப்போற்சவம் நடைபெற்றது.
மாமல்லபுரம் பேருந்து நிலையம் அருகே இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயிலுக்கு, சொந்தமான புண்டரீக புஷ்கரணி தெப்பக்குளம் கடற்கரை கோயில் செல்லும் வழியில் உள்ளது.
இக்குளத்தில், ஆண்டு தோறும் மாசி பவுா்ணமி அன்று தெப்ப உற்சவமும், மறுநாள் கடற்கரையில் தீா்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், தலசயன பெருமாள் ஸ்ரீதேவி - பூதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் சுற்றி வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் கோவிந்தா,கோவிந்தா கோஷத்துடன் வழிபட்டனா்.
விழாவுக்கான, ஏற்பாடுகளை தலசயன பெருமாள் கோயில் நிா்வாகம் மற்றும் வியாபாரிகள் தெப்ப உற்சவ கமிட்டியினா் செய்திருந்தனா்.
