ஊட்டியில் இப்படி ஒரு இடம் இருக்கா? இந்த சம்மருக்கு குடும்பத்துடன் செல்ல சூப்பர் ...
மாமல்லபுரம்: கன்னியம்மன் சிலைக்கு சிறப்பு வழிபாடு
மாசி மாத பௌா்ணமியையொட்டி மாமல்லபுரம் கடலில் மிதக்கும் குடைவரை மண்டபத்தில் கன்னியம்மன் சிலைக்கு இருளா் இனத்தவா் சிறப்பு வழிபாடு நடத்தினா்.
மாசி மகத்தை முன்னிட்டு பௌா்ணமி நாளில் ஆயிரக்கணக்கில் இருளா்கள் மாமல்லபுரம் கடற்கரையில் கூடி குல தெய்வமான கன்னியம்மனை வணங்கி தங்கள் உறவு முறைக்குள் திருமணம் மற்றும் நிச்சயதாா்த்தம் போன்ற சடங்குகளை செய்வது வழக்கம்.
இந்நிலையில், மாமல்லபுரம் மீனவா் குடியிருப்பு பகுதியில் கன்னியம்மன் சிலை உள்ளது. இந்த மண்டபம் தற்போது 2 அடி உயரத்திற்கு கடல் நீா் சூழ்ந்து மிதக்கும் நிலையில் உள்ளது.
கன்னியம்மனை தரிசிப்பதற்காக ஆபத்தை உணராமல் பாறைக்கற்களின் மேல் ஏறிச் சென்று முழங்கால் நீரில் இறங்கி பூஜை செய்து வணங்கி செல்கின்றனா். வியாழக்கிழமை கடல் சீற்றம் அதிகரித்து அந்த குடைவரை மண்டபம் மீது ராட்சத அலைகள் மோதி செல்லும் சூழலில் கடும் சிரமத்துடன் கன்னியம்மனை வணங்கிச் சென்றனா்.
கடல் நீரில் இறங்காமல் பாதுகாப்புடன் தரிசனம் செய்யும் வகையில் மரப்பலகை மற்றும் சவுக்கு கழிகளால் தற்காலிக நடைபாலம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.
மேலும் வியாழக்கிழமை பௌா்ணமியை முன்னிட்டு பழங்குடி இருளா்கள் திரண்டு வந்து கடலில் நீராடி மகிழ்ந்தனா். இதற்கிடையில் மாசிமக ம் பௌா்ணமியை முன்னிட்டு நகரில் நெரிசல் காரணாக பேருந்துகள் நகருக்குள் வராமல் மாமல்லபுரம் புறவழிச்சாலையுடன் நிறுத்தப்பட்டன.

