செய்திகள் :

முதல் டி20: 10 ஓவர்களில் நியூசி. அபார வெற்றி!

post image

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20யில் நியூசி. 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடரரின் முதல் டி20 போட்டி இன்று (மார்ச் 16) கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்களில் 91 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக குஷ்தில் ஷா 32 ரன்கள் எடுத்தார்.

நியூசி. பந்துவீச்சில் ஜேகோப் டூபி 4, ஜேமிசன் 3, இஷ் சௌதி 2 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்கள்.

அடுத்து விளையாடிய நியூசி. அணி 10.1 ஓவர்களில் 92/1 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதில் அதிகபட்சமாக டிம் செய்ஃபர்ட் 44, ஃபின் ஆலன் 29 ரன்கள் எடுத்தார்கள்.

ஜேமிசன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 2ஆவது டி20 போட்டி மார்ச்.18ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

இந்திய அணி வீரர்களுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பயணிப்பது சரியா? விராட் கோலி பதில்!

இந்திய அணி வீரர்கள் கிரிக்கெட் தொடர்களுக்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அவர்களுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பயணிப்பது குறித்து இந்திய அணியின் விராட் கோலி பேசியுள்ளார்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரா... மேலும் பார்க்க

பிசிசியின் விதிமுறைகள் வருத்தமளிக்கின்றன: விராட் கோலி

குடும்பங்களுடன் கிரிக்கெட் விளையாடுவதை விராட் கோலி ஆதரித்து பேசியுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்படுவதை தடுக்கும் வகையிலும், அணியில் ஒழுக்கம், ஒற்றுமை ஆக... மேலும் பார்க்க

டபிள்யூபிஎல்: 3-ஆவது முறையாக இறுதிப் போட்டியில் தோல்வியுற்ற தில்லி..! பயிற்சியாளர் கூறியதென்ன?

மகளிர் பிரீமியர் லீக்கில் பரபரப்பான இறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய தில்லி அணி 141/9 ரன்க... மேலும் பார்க்க

லா லீகா தொடர்: எம்பாப்பே 2 கோல்கள், ரியல் மாட்ரிட் முதலிடம்!

லா லீகா கால்பந்து தொடரில் வில்லார்ரியல் அணியுடன் மோதிய ரியல் மாட்ரிட் அணி 2-1 என வென்றது.வில்லார்ரியல் அணியின் வீரர் ஜுவான் போய்த் 7ஆவது நிமிஷத்தில் முதல் கோல் அடித்தார். 2 கோல்கள் அடித்த எம்பாப்பேஅடு... மேலும் பார்க்க

தில்லியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் 2-வது முறையாக சாம்பியன்!

மகளிர் பிரீமியர் லீக்கில் பரபரப்பான இறுதிப் போட்டியில் தில்லி அணியை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்.மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பையில் நடைபெற்ற இறுதிப்போட்டி... மேலும் பார்க்க

மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி: தில்லி கேபிடல்ஸுக்கு 150 ரன்கள் இலக்கு!

மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்துள்ளது.மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பையில் நடைபெற்று வரும் இறுத... மேலும் பார்க்க