செய்திகள் :

மறக்க முடியாத பரிசளித்த தோனி: அஸ்வின் நெகிழ்ச்சி!

post image

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனக்கு மறக்க முடியாத பரிசளித்ததாக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் சிஎஸ்கே அணி குறித்து எழுதப்பட்ட புத்தகத்தின் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் தோனி, அஸ்வின், ஸ்ரீகாந்த், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய அஸ்வின், தனக்கு மறக்க முடியாத பரிசை தோனி அளித்ததாக தெரிவித்தார்.

மேலும், அவர் பேசியதாவது:

”தர்மசாலாவின் இங்கிலாந்து அணிக்கு எதிராக நான் விளையாடிய 100-வது டெஸ்ட் போட்டியின் போது, எனக்கு நினைவு பரிசு வழங்க பிசிசிஐ திட்டமிட்டது. அப்போது, அந்த பரிசை தோனி கைகளால் பெற வேண்டும் என்பதற்காக அவரை தர்மசாலாவுக்கு அழைத்தேன். ஆனால், அப்போது தோனியால் வர முடியாமல் போனது. தோனி கைகளால் பரிசு பெற்றவுடன் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வுபெறும் முடிவை அறிவிக்க நினைத்திருந்தேன்.

ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் என்னை மீண்டும் எடுத்து மறக்க முடியாத பரிசை தோனி அளிப்பார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க : பாகிஸ்தானைவிட சிறந்தது இந்திய அணி: பிரதமர் மோடி

ஐபிஎல் தொடக்கத்தின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அஸ்வின், பின்னர் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளுக்காக விளையாடினார்.

இந்த நிலையில், ஐபிஎல் 2025 போட்டிக்கு நடைபெற்ற மெகா ஏலத்தின்போது, அஸ்வினை மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.

இதனிடையே, பார்டர் - காவஸ்கர் தொடரின்போது, 106-ஆவது டெஸ்ட் போட்டியுடன் அஸ்வின் ஓய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஹாரி ப்ரூக்குக்கு பிசிசிஐ விதித்த தடை கடுமையானதா? மொயின் அலி பதில்!

ஐபிஎல் தொடரில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஹாரி ப்ரூக் விளையாட பிசிசிஐ தடை விதித்தது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மொயின் அலி பேசியுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் வருகிற மார்ச் 22 ஆம் தேத... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய உம்ரான் மாலிக்; கேகேஆர் அணியில் மாற்று வீரர் சேர்ப்பு!

ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக உம்ரான் மாலிக் விலகியுள்ளார்.ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்ப... மேலும் பார்க்க

பஞ்சாப் கிங்ஸில் ஆப்கன் ஆல்ரவுண்டர் இணைவதில் தாமதம்; காரணம் என்ன?

ஐபிஎல் தொடருக்காக தயாராகி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் இணைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இன்னும் சில தினங்களில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளின் வீரர்க... மேலும் பார்க்க

கடந்த சீசனில் கேப்டன், இந்த முறை துணைக் கேப்டன்; தில்லி கேபிடல்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தில்லி கேபிடல்ஸ் அணியின் துணைக் கேப்டனை அந்த அணி நிர்வாகம் இன்று (மார்ச் 17) நியமித்துள்ளது.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பி... மேலும் பார்க்க

ஐபிஎல்: சென்னை - மும்பை போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் மார்ச் 19-ல் விற்பனை!

ஐபிஎல் 2025 தொடரின் சென்னை - மும்பை அணிகளுக்கான போட்டி மார்ச் 23-ல் சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இப்போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை மார்ச் 19 அன்று தொடங்குகிறது.ஐபிஎல் 2025 தொடர் வருகின்ற மார்ச்... மேலும் பார்க்க

இந்திய அணி பாகிஸ்தானை விட சிறந்த அணி: பிரதமர் மோடி

இந்திய அணி பாகிஸ்தானை விட சிறந்த அணி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாட்காஸ்டர் லெக்ஸ் பிரிட்மேனிடம் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி இதனைத் தெரிவித்தார்.இதை... மேலும் பார்க்க