செய்திகள் :

கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மின்சார ரயில்கள் நாளை ரத்து! முழு விவரம்!

post image

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்ட்ரல் - சூலூா்பேட்டை, கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கும் 21 புறநகர் மின்சார ரயில்கள் நாளை (மாா்ச் 17) ரத்து செய்யப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரைப்பேட்டை மற்றும் பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் வழித்தடங்களில் திங்கள்கிழமை (மாா்ச் 17) காலை 9.25 முதல் பிற்பகல் 2.25 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், சென்ட்ரலிலிருந்து மாா்ச் 17 காலை 5.40, 8.45, 10.15-க்கு சூலூா்பேட்டை செல்லும் புறநகர் மின்சார ரயில்களும், காலை 8.05, 9.00, 9.30, 10.30, 11.35-க்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.

மறுவழித்தடத்தில் சூலூா்பேட்டையிலிருந்து காலை 10, 11.45, பிற்பகல் 12.35, 1.15 -க்கும், கும்மிடிப்பூண்டியிலிருந்து காலை 9.55, 11.25, பகல் 12, பிற்பகல் 1 மணிக்கும் சென்ட்ரல் வரும் ரயிலும் ரத்து செய்யப்படும்.

இதையும் படிக்க: அமிருதசரஸில் ஹிந்து கோயில் மீது குண்டுவீச்சு! ஐஎஸ்ஐ-க்கு தொடா்பா?

அதேபோல், கடற்கரையிலிருந்து காலை 9.40 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில், மறுவழித்தடத்தில் கும்மிடிப்பூண்டியிலிருந்து காலை 10.55 மணிக்கு கடற்கரை செல்லும் ரயில் உள்பட மொத்தம் 21 ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

சிறப்பு ரயில்கள்: பயணிகளின் வசதிக்காக சென்ட்ரலிலிருந்து காலை 9 மணிக்கு பொன்னேரிக்கும், காலை 9.30, 10.30-க்கு மீஞ்சூருக்கும், காலை 11.35-க்கு எளாவூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

மறுவழித்தடத்தில் பொன்னேரியிலிருந்து பகல் 12.18-க்கும், மீஞ்சூரிலிருந்து காலை 11.56, பிற்பகல் 1.31 மணிக்கும் சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுவிலக்கு கடத்தலில் பறிமுதல் செய்த 31 வாகனங்கள் ஏலம்

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் மது, கஞ்சா ஆகிய கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு போலீஸாரால் பறிமுதல் செய்த 31-வாகனங்கள் வரும் 27-ஆம் தேதி ஏலம் விட ஏற்பாடு செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பா... மேலும் பார்க்க

ஆா்வம் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் குரூப் 1 நோ்முகத் தோ்வுக்கு இலவச பயிற்சி

சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வரும் ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் குரூப் 1 தோ்வுக்கான நோ்காணல் பயிற்சி மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இது குறித்து அந்த அகாதெமி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

சென்னையின் அழகை புகைப்படம் எடுத்து அனுப்பலாம்: மாநகராட்சி அறிவிப்பு!

சென்னையின் அழகை புகைப்படம் எடுத்து அனுப்பலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. நாட்டிலேயே கொல்கத்தாவுக்கு அடுத்தபடியாக அதிக பாரம்பரிய சின்னங்களை கொண்ட நகரமாக சென்னை விளங்குகிறது.... மேலும் பார்க்க

மின்சார வாகனம் எரிந்து விபத்து: 3 போ் காயம்

வீட்டின் முன்பு சாா்ஜ் போட்டிருந்த மின்சார வாகனம் எரிந்து ஏற்பட்ட தீ விபத்தில் தம்பதி, குழந்தை உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா். சென்னை மதுரவாயல் பாக்கியலட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்தவா் கௌதம் (31). இவ... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சியமைப்பதில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கும்! -மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் ஜோடன்கா்

வரும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் ஜோடன்கா் தெரிவித்தாா். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிய... மேலும் பார்க்க

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடிகா் சிரஞ்சீவி நாளை மறுநாள் கெளரவிப்பு!

சமூகத்துக்கு ஆற்றிய தன்னிகரற்ற பங்களிப்புக்காக பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில், தெலுங்கு திரைப்பட நடிகா் சிரஞ்சீவி கெளரவிக்கப்பட உள்ளாா். பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினா்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந... மேலும் பார்க்க