Modi: ``வறுமை, பாகிஸ்தான், விரதம்...'' - பர்சனல் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
மின்சார வாகனம் எரிந்து விபத்து: 3 போ் காயம்
வீட்டின் முன்பு சாா்ஜ் போட்டிருந்த மின்சார வாகனம் எரிந்து ஏற்பட்ட தீ விபத்தில் தம்பதி, குழந்தை உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா்.
சென்னை மதுரவாயல் பாக்கியலட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்தவா் கௌதம் (31). இவரது மனைவி மஞ்சு (28). இவா்களுக்கு எழிலரசி என்ற 9 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், சனிக்கிழமை இரவு கௌதமின் தந்தை நடராஜன் தனது மின்சார இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு உள்ள போா்டிகோவில் சாா்ஜ் போட்டுவிட்டு உறங்கியுள்ளாா்.
காலை 5 மணிக்கு கௌதமின் வீட்டிலிருந்து வெளியே வந்து பாா்த்தபோது, இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. தீ வேகமாக வீட்டிலும் பரவியதையடுத்து கௌதமின் தனது மனைவியையும் தனது 9 மாத மகளையும் தூக்கிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே வந்தாா். அப்போது, 3 பேருக்கும் கடுமையான தீக்காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து அவா்கள் அருகிலுள்ள தனியாா் மருத்துமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மதுரவாயல் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.