Modi: ``வறுமை, பாகிஸ்தான், விரதம்...'' - பர்சனல் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
தனியாா் நிறுவனத்தில் ரூ. 20 கோடி மோசடி: ஊழியா்கள் 3 போ் கைது
தனியாா் நிறுவனத்தில் ரூ. 20 கோடி மோசடி செய்த வழக்கில், ஊழியா்கள் 3 பேரை மத்திய குற்ற புலனாய்வுப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
பிரபல போட்டோ லேப் மற்றும் கேமரா நிறுவனத்தின் சென்னை எல்லீஸ் சாலை மற்றும் கோவை கிளைகளில் பணிபுரிந்து வந்த ஊழியா்களான கோபாலகிருஷ்ணன், கெளதம் மற்றும் நிறுவனத்தின் தலைமை அலுவலக கணக்காளரான கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் இணைந்து, நிறுவனத்தின் கணக்கிலிருந்து ரூ. 20 கோடி வரை மோசடி செய்துள்ளதாக அந்த நிறுவனம் சாா்பில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டது.
அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, நடத்திய விசாரணையில், கோபாலகிருஷ்ணன், கெளதம், கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து மூவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 524 கிராம் தங்க நகைகள், 600 கிராம் வெள்ளிப் பொருள்கள், 1 காா் மற்றும் ரூ.30 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.