செய்திகள் :

WPL: மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடிய ஹர்மன்ப்ரீத்; இரண்டாவது முறையாக சாம்பியனான மும்பை இந்தியன்ஸ்!

post image

வுமன்ஸ் ப்ரீமியர் லீகின் இறுதிப்போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி இரண்டாவது முறையாக சாம்பியன் ஆகியிருக்கிறது.

Harmanpreet

மும்பையின் ப்ரபோர்ன் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் மெக் லேனிங் டாஸை வென்றிருந்தார். முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார். அதன்படி மும்பை பேட்டிங்கை தொடங்கியது. மும்பைக்கு ஆரம்பத்திலேயே சறுக்கல் தொடங்கியது.

பவர்ப்ளேக்குள்ளாகவே யஸ்திகா பாட்டியா, ஹீலி மேத்யூஸ் என இரண்டு ஓப்பனர்களையும் மரிசானே காப் வீழ்த்தினார். மும்பை அணி 14-2 எனத் தடுமாறியது. அந்த சமயத்தில்தான் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் நட்சீவர் ப்ரண்ட்டும் கூட்டணி அமைத்தனர். இருவரும் இணைந்து 89 ரன்களை அடித்திருந்தனர். ஆரம்பத்தில் நின்று நிதானமாக ஆடி செட்டில் ஆன ஹர்மன்ப்ரீத் அதன்பிறகு அதிரடியாக ஆடினார். முதல் 15 பந்துகளில் 11 ரன்களை எடுத்திருந்தவர், அடுத்த 29 பந்துகளில் 55 ரன்களை எடுத்திருந்தார்.

நட்சீவர் ப்ரண்ட் ஒரு முனையில் நின்று பார்ட்னர்ஷிப்புக்கு உதவி 30 ரன்களை எடுத்திருந்தார். சதர்லேண்டின் ஓவரில் ஹர்மன்ப்ரீத்தும் சரணியின் ஓவரில் ப்ரண்ட்டும் அவுட் ஆகியிருந்தனர். இவர்கள் இருவரின் ஆட்டத்தாலும்தான் மும்பை அணி 149 ரன்களை எடுத்திருந்தது.

டெல்லி அணி இந்த டார்கெட்டுக்கு கடுமையான சவாலளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மும்பை அணி அவ்வளவு சிரமப்படவில்லை. டெல்லியின் ஓப்பனர்களான மெக் லேனிங்கும் ஷெபாலி வர்மாவும் பவர்ப்ளேக்குள்ளேயே அவுட் ஆகினர். நட்சீவர் ப்ரண்டும் ஷப்னிம் இஸ்மாயிலும் இவர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த ஆரம்பக்கட்ட சறுக்கல்களிலிருந்து டெல்லி அணியால் மீண்டு வர முடியவில்லை. ஜெமிமாவும் மரிசானே காப்பும் கொஞ்சம் முயன்றனர். அவர்களின் முயற்சி டார்கெட்டை நெருங்க உதவியதே தவிர வெல்ல முடியவில்லை. மும்பை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

MI

இந்த வெற்றியின் மூலம் வுமன்ஸ் ப்ரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் ஆகியிருக்கிறது.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

IPL 2025: "13 வயது வைபவை மூத்த அண்ணனாக இருந்து வழிநடத்துவேன்" - ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன்

ஐ.பி.எல் Jio Hotstar இல் ஒளிபரப்பாகவிருக்கும் நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் அதில் ஒளிபரப்பாகும் 'SuperStar' எனும் நிகழ்ச்சியில் வரவிருக்கும் ஐ.பி.எல் தொடர் பற்றி விரிவாகப் பேசியிரு... மேலும் பார்க்க

GOAT Bumrah: 'சரிந்துபோன குடும்பத் தொழில்; சிங்கிள் மதர் வளர்ப்பு - பும்ராவின் குடும்ப பின்னணி| Ep 2

'கிரிக்கெட் கனவுடன் குட்டிப் பையன்!'கன்னத்தை பிடித்துக் கிள்ளி கொஞ்சும் அளவுக்கு குழந்தைமை மாறாமல் இருக்கும் அந்த சிறுவனுக்கு கிரிக்கெட் என்றால் கொள்ளைப் பிரியம். அதிலும் அவனுக்கு பௌலர்கள் மீதுதான் கண... மேலும் பார்க்க

Champions Trophy: "நிகழ்வில் ஏன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் யாருமில்லை?" - சோயப் அக்தர்

பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. 2013க்குப் பிறகு மீண்டும் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற... மேலும் பார்க்க

Shreyas Iyer: இந்தியாவின் 'சைலன்ட் ஹீரோ' ஸ்ரேயாஷ் ஐயர்! கோப்பையை வெல்ல எப்படி உதவினார்?

சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்றிருக்கிறது. பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் இறுதி வரை சென்று இந்திய அணி திரில்லாக வென்றிருந்தது. ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். இந்திய அணி இந்தத்... மேலும் பார்க்க

Rohit Sharma: "ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுகிறேனா?" - வதந்திகள் குறித்து ரோஹித் சொல்வதென்ன?

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை இந்திய அணி வென்றிருக்கிறது. 2013 க்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபி கோப்பை மீண்டும் இந்திய அணியிடமே வந்திருக்கிறது. டி20 உலகக்க... மேலும் பார்க்க

`பந்தயம்னு வந்துட்டா நான் ராஜா' - தடையைத் தாண்டி சீறிப் பாய்ந்த குதிரைகள்; தேசிய அளவிலான போட்டி

ஆரோவில்லில் நடைபெறும் தேசிய அளவிலான குதிரைப் போட்டிபுதுச்சேரியை அடுத்த தமிழகப் பகுதியான ஆரோவில்லில் நடைபெறும் தேசிய அளவிலான குதிரைப் போட்டியில் தடைகளை தாண்டும் வீரர்கள்புதுச்சேரியை அடுத்த தமிழகப் பகுத... மேலும் பார்க்க