Champions Trophy: "நிகழ்வில் ஏன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் யாருமில்லை?" - சோயப் அக்தர்
பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. 2013க்குப் பிறகு மீண்டும் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. டி20 உலகக்கோப்பையை வென்ற எட்டே மாதத்தில் இந்திய அணி இந்த மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. வெற்றிக்குப் பிறகு பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் வீரர் சோயப் அக்தர் ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் பேசியிருப்பதாவது, "இந்திய அணி சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றதில் மிக்க மகிழ்ச்சி. ஆனால், அங்கு நான் ஒரு வினோதமான விஷத்தைக் கவனித்தேன். போட்டிக்குப் பிறகான பரிசளிப்பு நிகழ்வில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் எந்த பிரதிநிதியும் அங்கே இருக்கவில்லை. பாகிஸ்தானில் சாம்பியன் ட்ராபி நடைபெறுகிறது. ஆனால் பாகிஸ்தானிலிருந்து எந்த பிரதிநிதிகளும் ஏன் இறுதிப்போட்டிக்குச் செல்லவில்லை என்பது என் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது.
கோப்பையை வழங்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தைச் சேர்ந்த யாராவதும் சென்றிருக்க வேண்டும்தானே? இது எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. உலக அரங்கில் கவனம் பெறும் இந்த நிகழ்வில் பாகிஸ்தான் சார்பில் யாராவது இருந்திருக்க வேண்டும்" என்றார்.

அக்தரின் விமர்சனத்தைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
