IPL 2025 : 'ஸ்லீவ்லெஸ் ஜெர்சிக்கு தடை?' - ஐ.பி.எல் இன் புதிய விதி
2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. இந்நிலையில், ஐ.பி.எல் நிர்வாகம் வீரர்களுக்கு சில புதிய விதிமுறைகளை கொண்டு வந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஐ.பி.எல் நிர்வாகத்தின் புதிய விதிப்படி வீரர்கள் போட்டிக்கு பிறகான பரிசளிப்பு விழாவின் போது கைகளற்ற ஜெர்சி (ஸ்லீவ்லெஸ்) அணிந்து பங்கேற்க தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு முறை அப்படி ஸ்லீவ்லெஸ் ஜெர்சி அணிந்து பங்கேற்றால் எச்சரிக்கை விடுக்கப்படும். மீண்டும் அதே தவறை தொடர்ந்தால் அபராதம் விதிக்கப்படும் எனக் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், பரிசளிப்பு விழாவின் போது வீரர்கள் கேஸூவான செருப்பு அணியவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
அதேமாதிரி, வீரர்களின் குடும்பத்தினரும் ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள் அனுமதிக்கப்படக் கூடாது என்பதையும் உறுதியாக கூறியிருக்கின்றனர். மேலும், சீசன் நெருங்கும் வரைக்கு அந்தந்த அணிகள் தங்களின் ஹோம் க்ரவுண்ட்டில் ப்ராக்டீஸ் செய்யக்கூடாது எனவும் கூறப்பட்டிருக்கிறது.

சீசனுக்கு பிட்ச் ப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு கூறப்படுகிறது. சீசனுக்கு ஒரு மாதம் முன்பாகவே சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்கிவிடும் சென்னை அணி, இப்போது நாவலூர் அருகே இருக்கும் அந்த அணிக்கு சொந்தமான வேறொரு மைதானத்தில் பயிற்சி செய்து வருகின்றனர். இதேமாதிரி, அத்தனை அணிகளும் தங்களின் சொந்த மைதானத்தை விட்டுவிட்டு வேறு வேறு மைதானங்களிலேயே பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
