செய்திகள் :

IND vs NZ: `பதறவைத்த நியூசிலாந்து; பதிலடி தந்த வீரர்கள்' - சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியா

post image

சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டி நடந்து முடிந்திருக்கிறது. கடைசி வரை பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியை திரில்லாக வென்று இந்திய அணி 2013 க்குப் பிறகு மீண்டும் சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. நியூசிலாந்து அணி அத்தனை எளிதாக இந்திய அணியை வெல்ல வைத்துவிடவில்லை. நியூசிலாந்து பௌலர்கள், குறிப்பாக ஸ்பின்னர்கள் கடும் சவாலை அளித்திருந்தனர். அதையும் தாண்டி இந்தியா எப்படி இந்தப் போட்டியை வென்றது?

இந்தியாவுக்கு டார்கெட் 252 ரன்கள்தான். ஆனால், துபாய் மைதானத்தில் இந்த டார்கெட்டே கொஞ்சம் சவாலான டார்கெட்தான். எதிர்பார்த்ததை போலவே நியூசிலாந்து அணியின் ஸ்பின்னர்கள் மிகச்சிறப்பாக வீசி மிடில் ஓவர்களில் இந்திய அணியை கட்டுப்படுத்தி விட்டனர். ஆரம்பத்தில் ஆட்டம் முழுக்க இந்தியாவின் கையில்தான் இருந்தது. குறிப்பாக, பவர்ப்ளேயில் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சுழன்றடித்தார். ஜேமிசன் வீசிய முதல் ஓவரிலேயே சிக்சருடன்தான் ஆரம்பித்தார். ரூர்க் வீசிய அடுத்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள். புல் ஷாட், ப்ளிக் என சௌகர்யமாக ஷாட்களை ஆடியிருந்தார். நேதன் ஸ்மித்தையும் விட்டு வைக்கவில்லை. அவர் ஓவரிலும் சிக்சர்களை பறக்கவிட்டார்.

ரோஹித்தின் அதிரடியால் முதல் 10 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 64 ரன்களை எடுத்திருந்தது. ரோஹித் மட்டும் 49 ரன்களை எடுத்த்திருந்தார். பவர்ப்ளேக்கு பிறகுமே ஏதுவான பந்துகளை பவுண்டரி அடித்து ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து கில் - ரோஹித் கூட்டணி நன்றாகவே ஆடியது. இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களை கடந்தனர். ஆட்டம் அப்படியே நியூசிலாந்தின் கையை விட்டு செல்வது போல இருந்தது. அந்த சமயத்தில்தான் ஒரு ட்ரிங்ஸ் ப்ரேக் விடப்பட்டது. அந்த ப்ரேக்குக்கு பிறகு நியூசிலாந்து ஸ்பின்னர்கள் இந்திய அணியை இழுத்துப் பிடித்து ஆட்டத்துக்குள் வந்தனர். சாண்ட்னரின் பந்தில் கில் 31 ரன்களில் எக்ஸ்ட்ரா கவரை க்ளியர் செய்ய முயன்று க்ளென் பிலிப்ஸிடம் கேட்ச் ஆனார்.

Rohit

வழக்கம்போல இதுவும் ஒரு அசாதாரண கேட்ச்தான். ஒரு கேட்ச் போட்டியை எப்படி மாற்றும் என்பதற்கு இதை உதாரணமாக சொல்லலாம். அந்த ஒரு கேட்ச் நியூசிலாந்துக்கு பெரிய உற்சாகத்தை கொடுத்தது. உடனே ஆப் ஸ்பின்னரான ப்ரேஸ்வெல் கோலியின் விக்கெட்டை வீழ்த்தினார். 1 ரன்னில் கோலி lbw ஆகி வெளியேறினார். இந்தியா மீது அழுத்தம் ஏற ஆரம்பித்தது. நியூசிலாந்து அணி ஆட்டத்துக்குள் வந்தது. அதுவரை சீராக முன்னேறிக் கொண்டிருந்த இந்திய அணி கொஞ்சம் சுணங்கியது. டாட்கள் அதிகமாக ஆரம்பித்தது. நின்று பெரிய சதத்தை அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித்தும் ரச்சினின் பந்தில் இறங்கி வந்து பெரிய சிக்சருக்கு முயன்று 76 ரன்களுக்கு ஸ்டம்பிங் ஆனார். ப்ரேஸ்வெல், சாண்ட்னர், ரச்சின், க்ளென் பிலிப்ஸ் இந்த ஸ்பின் கூட்டணி இந்தியாவை திணறடித்தது.

இந்தியாவின் பக்கம் இருந்த போட்டியை இழுத்து பிடித்து சமநிலைக்கு கொண்டு வந்தது. 21-30 இந்த 10 ஓவர்களில் இந்திய அணி 28 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இந்த 10 ஓவர்களில்தான் நியூசிலாந்து அணி ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தது.ரோஹித் அவுட் ஆன போது இந்தியாவின் வெற்றிக்கு கிட்டத்தட்ட 130 ரன்கள் Run a Ball இல் தேவைப்பட்டது. இந்த சமயத்தில்தான் ஸ்ரேயாஷ் ஐயரும் அக்சர் படேலும் கூட்டணி சேர்ந்தனர். இருவருமே ஸ்பின்னர்களை நன்றாக ஆடக்கூடியவர்கள். இங்கேயும் நம்பிக்கையளிக்கும் வகையில் ஆடி பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க தொடங்கினர். முதலில் செட் ஆக சில பந்துகளை எடுத்துக் கொண்டனர். பின்னர் ஸ்ட்ரைக்கை நன்றாக ரொட்டேட் செய்து ஏதுவான பந்துகளை பவுண்டரியாக்கி தேவைப்பட்ட ரன்ரேட்டை Run a Ball லேயே வைத்துக் கொண்டனர். இதனால் ஆட்டம் கையை மீறி செல்லாமல் இருந்தது.

Shreyas Iyer

ஓப்பன் ஸ்டாண்ட்ஸில் நின்று கொண்டு பின்னங்காலிலும் இறங்கி வந்தும் ஸ்ரேயாஷ் ஸ்பின்னர்களை அட்டகாசமாக ஆடினார். ரூர்க் வீசிய 37 வது ஓவரில் ஸ்ரேயாஷ் 100 மீ க்கும் மேல் ஒரு பெரிய சிக்சரை அடித்திருந்தார். அதற்கடுத்த பந்தையே மீண்டும் பெரிய ஷாட்டுக்கு முயன்று பவுண்டரி லைனில் ஜேமிசனின் கையில் கொடுத்திருந்தார். ஆனால், ஜேமிசன் ட்ராப் செய்திருந்தார். ஆனால், இந்த வாய்ப்பை ஸ்ரேயாஷ் பயன்படுத்திக் கொள்ளவில்லை. முதலில் ஒரு ட்ரிங்ஸ் ப்ரேக்குக்கு பிறகு நியூசிலாந்து ஆட்டத்துக்குள் வந்ததல்லவா? அதை போல மீண்டும் ஒரு ட்ரிங்ஸ் ப்ரேக் 38 வது ஓவர் முடிந்த பிறகு வந்தது. ட்ரிங்ஸ் ப்ரேக்கை முடித்துவிட்டு சாண்ட்னர் பந்தை கையில் எடுத்தார். அந்த ஓவரில் லெக் ஸ்டம்ப் லைனில் வீச ஸ்ரேயாஷ் மடக்கி ஆட முற்பட்டு ஷார்ட் பைன் லெக்கில் ரச்சினிடம் 48 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மீண்டும் இந்திய அணியின் மீது அழுத்தம் கூடியது.

கடைசி 10 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 61 ரன்கள் தேவைப்பட்டது. ராகுலும் அக்சரும் க்ரீஸில் இருந்தனர். சாண்ட்னர் 41 வது ஓவரை வீசினார். ராகுல் இந்த ஓவரில் லாங் ஆனில் பெரிய சிக்சர் ஒன்றை பறக்கவிட்டார். இந்த ஓவரில் மட்டும் 11 ரன்கள். 42 வது ஓவரை ப்ரேஸ்வெல் வீசினார். இந்த ஓவரில் அக்சர் ஒரு பெரிய ஷாட்டை அடிக்க முயன்று 29 ரன்களில் லாங் ஆபில் கேட்ச் ஆகி அவுட் ஆனார். போட்டி இன்னும் பரபரப்பானது. ராகுல், ஹர்திக், ஜடேஜா என மூன்றே மூன்று பேட்டர்கள்தான் எஞ்சியிருந்தனர்.

Nz

ராகுலும் ஹர்திக்கும் அடுத்த சில ஓவர்களை பார்த்து ஆடினார். குறிப்பாக சாண்ட்னரின் கடைசி ஓவரில் கவனமாக ரிஸ்க் எடுக்காமல் தவிர்த்தனர். கடைசி 5 ஓவர்களில் இந்திய அணிக்கு 32 ரன்கள் தேவை. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் எனும் நிலை. 46 வது ஓவரை ரச்சின் வீசினார். முதல் பந்தையே அவரின் தலைக்கு மேலாக பெரிய சிக்சராக்கினார் ஹர்திக். மிரட்டலான சிக்சர்.

Hardin

கடைசி 4 ஓவர்களில் 21 ரன்கள் தேவைப்பட்டது. ரூர்க் வீசிய 47 வது ஓவரில் ஹர்திக் ஒரு பவுண்டரியை அடிக்க கடைசி 3 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. போட்டியை ஹர்திக் முடித்துக் கொடுப்பார் என எதிர்பார்க்கையில் ஜேமிசன் வீசிய 48 வது ஓவரில் ஒரு ஷார்ட் பாலில் கேட்ச் ஆகி வெளியேறினார்.ஆனாலும், பெரிய அழுத்தமில்லை. ஜடேஜாவோடு சேர்ந்து ராகுல் போட்டியை முடித்துக் கொடுத்துவிட்டார்.

Rahul

இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் சமபலம் வாய்ந்த அணிகளாகவே இறுதிப்போட்டிக்குள் வந்தன. எதிர்பார்த்ததை போலவே அனல் பறக்கும் போட்டியாகவே இந்த போட்டி அமைந்திருந்தது. அழுத்தமான சூழல்களை சிறப்பாகக் கையாண்டு இந்திய அணி சிறப்பாக வென்றிருக்கிறது. 2013 க்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி மீண்டும் வென்றுள்ளது. டி20 உலகக்கோப்பையை வென்ற எட்டே மாதத்தில் மீண்டும் ஒரு ஐ.சி.சி கோப்பை. Unstoppable India. கொண்டாடுங்க மக்களே!

Mitchell Santner : ``நாங்கள் மிகச்சிறந்த அணியிடம் தோற்றிருக்கிறோம்" - தோல்வி பற்றி சாண்ட்னர்

பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. 2013க்குப் பிறகு மீண்டும் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற... மேலும் பார்க்க

Rohit Sharma Speech: ``இந்த அணி என்னை நம்புகிறது"- நெகிழ்ந்த ரோஹித்

பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. 2013க்குப் பிறகு மீண்டும் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற... மேலும் பார்க்க

IND vs NZ: ``ஒரு அணியாக நிறைய சவால்களையும் அழுத்தங்களையும் சந்தித்திருக்கிறோம்'' - கே.எல்.ராகுல்

பரபரப்பாக நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. ரோகித் சர்மா2013க்குப் பிறகு மீண்டும் இந்திய... மேலும் பார்க்க

IND vs NZ: ``கே.எல். ராகுல் ஆடுவதைப் போன்ற ஷாட்களை வேறு யாராலும் ஆட முடியுமா!'' - ஹர்திக் பாண்டியா

பரபரப்பாக நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றிருக்கிறது. Rohit SharmaIND vs NZ: `பதறவைத்த நியூசிலாந்து; பதிலடி தந... மேலும் பார்க்க

Virat Kohli : ``நண்பர் வில்லியம்சனை பார்த்தால் வருத்தமாக இருக்கிறது; ஆனாலும்..." - கோலி நெகிழ்ச்சி

பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. 2013க்குப் பிறகு மீண்டும் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற... மேலும் பார்க்க

Rohit Sharma: `கோப்பைகளோடு அரியணை ஏறும் ரோஹித்' - வாய்ப்புக்காக ஏங்கியிருந்தவன் உலகை வென்ற கதை

'தோனியின் அரியணையில் ரோஹித்!'சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தைத் தோற்கடித்து இந்திய அணி வென்றிருக்கிறது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வெல்லும் இரண்டாவது ஐ.சி.சி கோப்பை இது. ... மேலும் பார்க்க