Lalit Modi: அதிரடி உத்தரவிட்ட VANUATU பிரதமர்; ரத்தாகும் லலித் மோடியின் பாஸ்போர்...
தமிழகத்தை பழிவாங்கும் மத்திய அரசு: மக்களவையில் திமுக எம்பிக்கள் பேச்சு
ஒரு மாநிலத்துக்கு ஒதுக்க வேண்டிய கல்வி நிதியை, மாணவர்களின் கல்விக்காக செலவிட வேண்டிய தொகையை, அந்த மாநிலத்தைப் பழிவாங்குவதற்காக நிறுத்திவைத்து, பழிவாங்கும் கருவியாகப் பயன்படுத்துவது சரியானதா என்று திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது மாநிலத்தில் கல்வி பயிலும் மாணவர்களை அல்லவா பாதிக்கிறது என்றும் அவர் கேட்டுள்ளார்.
தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதி மறுக்கப்பட்டது தொடர்பாக மக்களவையில் இன்று காரசார விவாதம் நடைபெற்றது.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால், மாநில அரசின் எதிர்காலத்தோடு மத்திய அரசு விளையாடுவதாகவும் தமிழச்சி தங்கபாண்டியன் கூறியுள்ளார்.