`ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் ராம் ரெண்டு பேர்கிட்டேயும் ஒரு ஒற்றுமை இருக்கு’ - நெகி...
வேதாரண்யேசுவரர் கோயிலில் தேரோட்டம்: திரளானோர் பங்கேற்பு!
நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயில் மாசிமகப் பெருவிழாவையொட்டி, இன்று காலையில் தொடங்கிய தேரோட்டத் திருவிழாவில் ஏராளமான மக்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
வேதாரண்யேசுவரர் கோயிலில் நிகழாண்டு மாசிமகப் பெருவிழா கடந்த பிப்.20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாசிமகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ரத்ன சிம்மாசன ஹம்ச நடன புவனி விடங்க தியாகராஜசுவாமி எழுந்தருளும் தேரோட்டம் திங்கள்கிழமை காலையில் தொடங்கியது.
பாரம்பரிய முறைப்படி தப்பு, தாரை, கொம்பு முழங்க நாதஸ்வர இசையுடன் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. தேரோட்டத் திருவிழாவையொட்டி வேதாரண்யம் வட்டாரத்துக்குள்பட்ட பகுதியில் செயல்படும் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.