செய்திகள் :

`இசை என்னவென்று தெரிந்திருந்தால், இசைப்பதையே நிறுத்தியிருப்பேன்!’ - இளையராஜா குறித்து பார்த்திபன்

post image

இளையராஜா தன்னுடைய முதல் சிம்போனியை லண்டனில் அரங்கேற்றிவிட்டு, இன்று சென்னை திரும்பி இருக்கிறார்.

அதுக்குறித்து உள்ளே வெளியே, அழகி உள்ளிட்ட படங்களில் இளையராஜா உடன் இணைந்து பணியாற்றிய இயக்குநர் பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது...

இசையின் ராஜா

"என் தாய்க்கு முன்பே ஆயிரம் கோடி தாய்மார்கள் இப்பூமியில் அவதரித்திருந்தாலும் என்னை ஈன்றெடுத்தவளை தானே நான் என் தாய் என்பேன். அப்படி இசையை நான் அறிந்தது அந்த இசை சித்தர் ரூபத்தில் தான்.

S M சுப்பையா நாயுடு, M S விஸ்வநாதன் போன்ற இசை மேதைகள் கொடி கட்டிய இசையுலகில், கோலோச்சிய இசையின் ராஜா.

‘இசையராஜா’, ‘இசை (alias) இளையராஜா’ என்றெல்லாம் இசை என்றால் என்னவென்று தெரியாத என்னால் புகழப்பட்ட இளையராஜா.

அவரின் இசையைப் போன்றே நேசிக்கிறேன்...

“பார்த்திபனிடம் கேட்டது என்னிடம் நானே கேட்டுக் கொண்டது, எனக்கே இசை என்றால் என்னவென்றே தெரியாது. தெரிந்திருந்தால் இசைப்பதையே நிறுத்தியிருப்பேன்” என்றெல்லாம் தன்னடக்கத்துடன் அவரின் உதடுகள் பேசுவதை விட, “என்னைத் தவிர எவன் கர்வம் கொள்ள முடியும்?" என்று அவர் உள்ளத்திலிருந்து திமிரி உச்சஸ்தாயியில் உதிர்க்கும் உயிர்மை வார்த்தைகளையே நான் அவரின் இசையைப் போன்றே நேசிக்கிறேன்.

இன்றவர் சொல்வதை என்றிலிருந்தோ நான் சொல்லி வருகிறேன். அவர் செய்த சாதனைகளுக்கு கர்வம் கொள்ளக் கூட நேரமின்றி இன்னும் சாதிக்க இசைக்குள் மூழ்கி விடுகிறார் என்று. அவரின் பிரசாத் ஒலிப்பதிவு கூடத்தின் மூலை முடுக்கெல்லாம் அவருக்கு நான் வழங்கிய நினைவு பரிசுகளே நிரம்பி வழியும் என் நினைவுக்குள் அவரே ததும்பி வழிவதைப் போல!!!

திரு கலைமணி என்ற கதாசிரியர் “அவர நம்பி இருக்கிற சினிமா கம்பெனிய எல்லாம் காய வைச்சுட்டு சிம்பொனி எழுதப் போயிட்டாரு” கம்பெனி சிம்பொனி என்று காமெடி PUN-ணினார், முதன் முதலில் அவர் சிம்பொனி எழுதச் சென்ற போது. எண்பது என்பது மூப்பிற்கு முன்னுரிமை வழங்கும் பருவம்! எண்பத்தி இரண்டிலும் பண்ணைபுரத்தில் பண்ண இசைத்தவம் போல ஓயாது உழைத்து உலகெங்கும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி , இடை இடையே இன்னும் இசையை இழைத்து இந்த சிம்பொனியை (சத்தியமாக spelling அன்றி வேறொன்றறியோம் பராபரமே) அரங்கேற்ற அவர் லண்டனின் அப்பல்லோ அரங்கில் நுழைகையில் ….

அப்பல்லோ என்ற விண்கலம் சந்திரனைத் தொட தீப் பிழம்புகளை கக்கியபடி சீறி புறப்பட்ட போது உலகமே கொண்ட உவகைப் போல என் உள்ளமும் உணர்ச்சி பிழம்பானது.

இன்னும் உண்மையாக சொல்லப் போனால்….

நானே ஒரு தாய் ஸ்தானத்தில் புதிய சாதனை படைக்கப் போகும் என் இளைய மகனை பார்ப்பதைப் போலவே பெருமித்த்துடன் பார்த்தேன்.

இளையராஜாவை அம்மான்னு ஆரம்பிச்சு கடைசியில மகன்னு முடிச்சிட்டீங்களேன்னு நீங்க கேக்காம கேக்குறது எனக்கே கேக்குது.

மற்ற இயக்குனர்களின் வெற்றியை உளமாற நான் பாராட்டினாலும், இயக்குனராக முழு வேகத்தில் தயாராகி வரும் என் மகனின் வெற்றியை என் உயிரே கொண்டாடுமே! அப்படியொரு ஆனந்த யாழ் இதயத்திற்குள் மீட்டப்படுகிறது!".

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் ராம் ரெண்டு பேர்கிட்டேயும் ஒரு ஒற்றுமை இருக்கு’ - நெகிழும் சந்தோஷ் தயாநிதி

சந்தானத்தின் 'இனிமே இப்படித்தான்' படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனவர் சந்தோஷ் தயாநிதி. ராமின் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் டீசருக்கும் இசையமைத்திருந்தார். இப்போது ராமின் 'பறந்து போ' படத்திற்கு இசையமைத்த... மேலும் பார்க்க

Abinaya: `15 வருடக் காதல்'- அபிநயாவிற்கு நிச்சயதார்த்தம்; குவியும் வாழ்த்துகள்

நடிகை அபிநயாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்திருக்கிறது. சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான 'நாடோடிகள்' படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அபிநயா. 'ஈசன்', 'குற்றம் 23', 'மா... மேலும் பார்க்க

Ilaiyaraaja: `கடவுளா... 'இளையராஜா அளவுக்கு கடவுளை கீழே இறக்கிட்டீங்களே'’ - சென்னை திரும்பிய இளையராஜா

லண்டனில் சிம்பொனி அரங்கேற்றத்தை முடித்துவிட்டு, தற்போது சென்னை திரும்பியுள்ளார் இளையராஜா. அவரை தமிழ்நாடு அரசு சார்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார்.சிம்பொனி அரங்கேற்றம் குறித்து சென்னை விமான நில... மேலும் பார்க்க

``ரீல்ஸ் பண்றவங்களுக்கு சினிமாவுல வாய்ப்பு; எனக்கு இப்போதும் அங்கீகாரம் இல்ல"- டெலிபோன் ராஜ் பேட்டி

`சுழல்' வெப் சீரிஸின் முதலாவது சீசனின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது.Suzhal 2 ReviewSuzhal 2 Review: நாட்டார் தெய்வங்களின் கனெக்ட் ஓகே; ஆ... மேலும் பார்க்க

Rajinikanth: கள்ளழகர் கோயில், 18-ஆம் படி கருப்பணசுவாமி - ரஜினி மகளின் ஆன்மிகப் பயணம்

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா, அவரின் கணவர் விசாகனும் பல்வேறு வேண்டுதல்களுடன் முக்கிய கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளார். சௌந்தர்யா-விசாகன்அந்த வகையில் தென் மாவட்ட கோயில்களில் சிறப்பு... மேலும் பார்க்க

Vijay: `ஜனநாயகன் விஜய் எப்படி?!' - விருது விழாவில் பாபி தியோல்

`கங்குவா' திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் விஜய்யுடன் `ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார் பாலிவுட் நடிகர் பாபி தியோல். `கங்குவா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இந்த பாலிவுட் நடிகர் `ஜன நாயகன்' படத்... மேலும் பார்க்க