கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 55-க்கும் மேற்பட்ட நீா்வாழ் பறவைகள் பட்டியலிடப்பட்டுள்ள...
Vijay: `ஜனநாயகன் விஜய் எப்படி?!' - விருது விழாவில் பாபி தியோல்
`கங்குவா' திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் விஜய்யுடன் `ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார் பாலிவுட் நடிகர் பாபி தியோல். `கங்குவா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இந்த பாலிவுட் நடிகர் `ஜன நாயகன்' படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரை தாண்டி ப்ரியாமணி, பூஜா ஹெக்டே, மமிதா பைஜு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
2025-ம் ஆண்டுக்கான IIFA டிஜிட்டல் விருதுகள் ஜெய்பூரில் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வந்த பாபி தியோல் க்ரீன் கார்ப்பெட்டில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அங்கு விஜய்யுடன் நடிப்பது பற்றியும், தன் ரசிகர்களைப் பற்றியும் பேசியிருக்கிறார்.
பாபி தியோல் பேசுகையில், `` தளபதி விஜய்யுடன் நடித்துக் கொண்டிருக்கிறேன். அவர் ஒரு ஸ்வீட் ஹார்ட்! எப்போதும் சிம்பிளாக (Down to earth) இருப்பார்." என்றவர், `` கடவுள் மிகவும் அன்பானவர். சினிமாவில் கடைசி 30 வருடங்களில் என் ரசிகர்கள் எனக்காக இருந்திருக்கிறார்கள். அப்பாவினால்தான் இப்படியான மக்களின் அன்பு கிடைத்திருப்பதாக நினைக்கிறேன்.

மக்களின் அன்பு, நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர வைக்கிறது. நான் எப்போது விருதை வென்றாலும் அது என் ரசிகர்களுக்குதான். என்னுடைய கம்போர்ட் சோனை விட்டு வெளியே இருக்கும் சவாலான கதாபாத்திரங்களைத்தான் ஏற்று நடிக்க எனக்கு எப்போதும் பிடிக்கும்." எனக் கூறியிருக்கிறார்.