செய்திகள் :

Kushboo - Sundar.C : `லவ் யூ சுந்தரா!' 25-வது திருமண நாள் குறித்து குஷ்பு நெகிழ்ச்சிப் பதிவு

post image

சுந்தர். சி - குஷ்பு தம்பதிக்கும் 25-வது திருமண நாள் இன்று!

இன்று காலை பழநி முருகன் கோயிலில் இயக்குநர் சுந்தர்.சி முடிகாணிக்கைச் செலுத்தி நேர்த்திக் கடனைச் செலுத்தியிருந்தார். 25-வது திருமண நாளைக் கொண்டாடும் வகையில் குடும்பத்துடன் பழநி முருகன் கோயிலுக்குச் சென்றிருக்கிறார் சுந்தர்.சி. இதனையடுத்து அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் , தங்களுடைய திருமணத்தன்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருகிறார் குஷ்பு.

அந்தப் பதிவில் அவர், `` 25வது திருமண நாள் வாழ்த்துகள். நீங்களும் நானும் எப்போதும் ஒன்றுதான்! லவ் யூ சுந்தரா. சில மாற்றங்களைச் செய்து என்னுடைய திருமணப் புடவையை 25-வது திருமண நாளில் அணிந்திருப்பதைப் பெருமையாக உணர்கிறேன். பழநி முருகனின் ஆசியுடன் இந்த நாளைத் தொடங்கியிருக்கிறோம். இன்று எங்களிடம் இருக்கும் விஷயங்கள் அனைத்தும் பழநி முருகனின் ஆசியில்லாமல் சாத்தியமாகியிருக்காது!'' என நெகிழ்ந்துப் பதிவிட்டிருக்கிறார்.

சுந்தர். சி இயக்கத்தில் உருவாகவிருக்கிற `மூக்குத்தி அம்மன் 2' படத்தின் பூஜை கடந்த வாரம் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இதனைத் தாண்டி சுந்தர்.சி இயக்கியிருக்கும் `கேங்கர்ஸ்' திரைப்படமும் அடுத்த மாதம் 24-ம் தேதி வெளியாகவிருக்கிறது.

Rajinikanth: கள்ளழகர் கோயில், 18-ஆம் படி கருப்பணசுவாமி - ரஜினி மகளின் ஆன்மிகப் பயணம்

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா, அவரின் கணவர் விசாகனும் பல்வேறு வேண்டுதல்களுடன் முக்கிய கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளார். சௌந்தர்யா-விசாகன்அந்த வகையில் தென் மாவட்ட கோயில்களில் சிறப்பு... மேலும் பார்க்க

Vijay: `ஜனநாயகன் விஜய் எப்படி?!' - விருது விழாவில் பாபி தியோல்

`கங்குவா' திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் விஜய்யுடன் `ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார் பாலிவுட் நடிகர் பாபி தியோல். `கங்குவா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இந்த பாலிவுட் நடிகர் `ஜன நாயகன்' படத்... மேலும் பார்க்க

Sangeetha: `25 வருட இடைவெளிக்குப் பிறகு' - கம்பேக் கொடுக்கும் `பூவே உனக்காக' சங்கீதா

25 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் களமிறங்குகிறார் நடிகை சங்கீதா.தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக வலம் வந்த நேரத்திலேயே `பூவே உனக்காக' சங்கீதா தன்னுடைய திருமணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்... மேலும் பார்க்க

சுந்தர்.சி -குஷ்புவின் 25 ஆம் ஆண்டு திருமண நாள்; பழனியில் தரிசனம் செய்த குடும்பம் |Photo Album

நடிகர் தம்பதிநடிகர் தம்பதிநடிகர் தம்பதிநடிகர் தம்பதிநடிகர் தம்பதிநடிகர் தம்பதிநடிகர் தம்பதிநடிகர் தம்பதிநடிகர் தம்பதிநடிகர் தம்பதிநடிகர் தம்பதிநடிகர் தம்பதிநடிகர் தம்பதிநடிகர் தம்பதி மேலும் பார்க்க

``அமைச்சர் சேகர் பாபு சொன்ன மாதிரி..." - திமுக விழாவில் விஜய் ஆண்டனி

நேற்று நடந்த 'முதல்வரின் கலைக்களம் - மக்கள் முதல்வரின் மனிதநேய விழா' என்ற திமுக நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி கலந்துக்கொண்டார். நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு, சென்னை மேயர... மேலும் பார்க்க