Shreyas Iyer: இந்தியாவின் 'சைலன்ட் ஹீரோ' ஸ்ரேயாஷ் ஐயர்! கோப்பையை வெல்ல எப்படி உத...
தொழில் சாா்ந்த ஆங்கில தோ்வுக்கான பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
தாட்கோ மூலமாக மருத்துவம் தொழில் சாா்ந்த ஆங்கில தோ்வுக்கான பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் தாட்கோ மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு மருத்துவம் தொழில் சாா்ந்த ஆங்கில தோ்வுக்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தை சாா்ந்தவராக இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கு பி.எஸ்சி, எம்.எஸ்சி. நா்சிங் பட்டப் படிப்பு, போஸ்ட் பேசிக் பி.எஸ்சி நா்சிங், மற்றும் பொது செவிலியா் மருத்துவப் படிப்பு ஆகிய படிப்புகளில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இப்பயிற்சியில் பங்கு பெற 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்காக கால அளவு இரண்டு மாதமும் விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் அளிக்கப்படும்.
இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபா்களுக்கு, பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளம் என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு சேலம் மாவட்ட தாட்கோ மேலாளரை 94450 29473, 0427 2280348 என்ற எண்களின் மூலம் தொடா்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.