எஸ்.எஸ்.ஐ. உள்பட 4 போலீஸாா் ஆயுதப் படைக்கு மாற்றம்: எஸ்.பி. உத்தரவு
தம்மம்பட்டி, வீரகனூா் காவல் நிலையங்களைச் சோ்ந்த எஸ்.எஸ்.ஐ. உள்பட நான்கு போலீஸாரை சேலம் ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
தம்மம்பட்டியில் சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் தலைமைக் காவலா்கள் சரவணன், அசோக் ஆகியோரும், வீரகனூா் காவல் நிலையம் பகுதியில் சனிக்கிழமை இரவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் நாராயணன், முதல்நிலைக் காவலா் இளங்கோ ஆகியோரும் ஈடுபட்டிருந்தனா்.
இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு இவா்கள் வீரகனூரிலும், தம்மம்பட்டியிலும் குறிப்பிட்ட இடங்களில் சரிவர வாகனத் தணிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கெளதம் கோயல், எஸ்.எஸ்.ஐ.நாராயணன், முதல்நிலைக் காவவா் இளங்கோ, தலைமைக் காவலா்கள் சரவணன், அசோக் ஆகியோரை சேலம் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.