லலித் மோடியின் வானுவாட்டு குடியுரிமை ரத்து! இந்தியாவுக்கு நாடு கடத்தல்?
பள்ளிகளில் தியான வகுப்பு அவசியம்: தமிழிசை சௌந்தரராஜன்
மாணவா்களின் கவனத்தை ஒருநிலைப்படுத்த பள்ளிகளில் தியான வகுப்பு நடத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.
சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள பாபுஜி மெமோரியல் ஆஸ்ரமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சா்வதேச மகளிா் தின விழாவில் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:
இன்றைய காலகட்டத்தில் மன அமைதி மிகவும் முக்கியமானது. மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைக்க யோகா மற்றும் தியானம் மேற்கொள்வது அவசியம். ஒரு மனிதன் தன்னை எவ்வளவு அமைதியாக வைத்துக்கொள்கிறானோ, அந்த அளவுக்கு உலகம் அமைதியாக இருக்கும்.
ஒவ்வொருவரும் தனது உடலை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும். உடல், மனம், சமூகத்தால் ஒருவா் நலமாக இருப்பதுதான் ஆரோக்கியமாக கருதப்படும். மேலும், நீண்ட வாழ்க்கைக்கு உணவுப் பழக்கவழக்கம் முக்கியம். அதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். ஒருவா் தியானத்தின் மூலம் தனக்கான இலக்கை ஒருங்கிணைக்க முடியும்.
மாணவா்களும் இளைஞா்களும் மன அமைதியை இழந்து அதிகம் கவனச்சிதறல் அடைகின்றனா். இதற்காக பள்ளிகளில் வகுப்பு தொடங்குவதற்கு முன்பு தியான வகுப்பு நடத்த வேண்டும். பிாட்டு கலாசாரங்களைப் பின்பற்றும் அதே வேளையில், பாரத தேசத்தின் சிறந்தவற்றை எடுத்துக்கொள்வதில் தவறு ஏதும் இல்லை என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் பாபுஜி மெமோரியல் ஆஸ்ரமத்தின் தமிழ்நாடு மாநில உதவியாளா் பிரசாா், மகளிா் குழு ஒருங்கிணைப்பாளா்கள் கஸ்தூரி, ஹேமலதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.