செய்திகள் :

கூடலூர்: அடுத்தடுத்து கவிழ்ந்த பேருந்துகள்; அதிர்ஷ்டவசமாகத் தப்பிய உயிர்கள்; பின்னணி என்ன?

post image

கூடலூரில் நேற்று ஒரே நாளில் இரு வேறு பகுதிகளில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பயணிகள் காயமடைந்துள்ளனர். கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து ஊட்டியை நோக்கிச் சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளின் பேருந்து ஒன்று கூடலூர் அருகில் உள்ள பாடந்துறை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து தேயிலைத் தோட்டத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 10 பேர் காயம் அடைந்தனர். பேருந்துக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பேருந்து விபத்து

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் காஞ்சி கோயில் பகுதியிலிருந்து திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காகக் கூடலூர் சென்று கொண்டிருந்தவர்களின் பேருந்து கூடலூர் அருகில் உள்ள தவளை மலைப் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. சாலையிலிருந்து நிலைதடுமாறி சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்த பேருந்திலிருந்தவர்களை வாகன ஓட்டுநர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

படுகாயமடைந்த 5 பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை. இந்த இரண்டு விபத்துகள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மலைப்பாதையில் அனுபவமிக்க ஓட்டுநர்களைக் கொண்டு கூடுதல் கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும் எனக் காவல்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

திருப்பத்தூர்: அரசுப் பள்ளி மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து 3 மாணவர்கள் படுகாயம்!

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள சங்கராபுரம் பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளியில், 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 2022-23-ம் நிதியாண்டில், வாணியம்பாடி தொகுதி எ... மேலும் பார்க்க

South Korea: திடீரென சரிந்து விழுந்த பாலம்; 4 பேர் பலி; 5 பேர் படுகாயம்! -பதறவைக்கும் வீடியோ காட்சி

தென் கொரியாவில் கட்டுமானப் பணியின்போது பாலம் இடிந்து விழுந்ததில் இரண்டு சீனர்கள் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.தென் கொரிய தலைநகருக்கு அருகே இருக்கும் நகரம் அன்சியோங்கில். இங்கு பாலம் கட்டும் பணி நடைப... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: எலி ஸ்பிரேயை முகத்தில் அடித்து விளையாடியதால் விபரீதம்... மருத்துவமனையில் 4 சிறுவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள மண்ணவேளாம்பட்டியைச் சேர்ந்தவர் ராமராசு. இவரது மகன் ரிசிகேஷ் (வயது-6). அதே பகுதியைச் சேர்ந்தவர்களான பழனிச்சாமி மகன் ரித்திக் (6), வீரப்பன் மகன் கருப்பசாமி (5... மேலும் பார்க்க

சிவகங்கை: மேடையில் ஆடும்போதே உயிரிழந்த நடனக் கலைஞர்; புத்தகத் திருவிழாவில் நடந்த சோகம்

சிவகங்கை மன்னர் பள்ளி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகத் திருவிழா பிப்ரவரி 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.புத்தகத் திருவிழாவுக்கு வருகின்றவர்களை ஈர்க்கும் வகையில் அங்கு அமைக்கப்பட்டு... மேலும் பார்க்க

Ooty: கிணற்றுக்குள் எட்டிப் பார்த்த தாய்; சடலமாய் குழந்தைகள்; ஊட்டியை உலுக்கிய துயரம்; நடந்தது என்ன?

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள நடுவட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சதீஷ்- ஷாலினி தம்பதி. இவர்களுக்கு நித்தீஷ் என்கிற 5 வயது ஆண் குழந்தையும், பிரிநிதா என்கிற 3 வயது பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலை... மேலும் பார்க்க

Maharashtra: போலீஸிடமிருந்து தப்பிக்க மணலைக் கொட்டிய லாரி ஓட்டுநர்; உயிரோடு புதைந்த தொழிலாளர்கள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்காலிக குடிலில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரியில் கொண்டு வரப்பட்ட மணலைப் போட்டதில் 5 உயிரிழந்துள்ளனர்.ஜல்னா மாவட்டத்தில் இருக்கும் பசோடி சிவார் என்ற இடத்தில் மேம்பாலம் ... மேலும் பார்க்க