'வரலாற்றில் மிகப்பெரும் பிழையை செய்ய நினைக்கிறது மத்திய பாஜக அரசு' - எஸ். ரகுபதி
புதுக்கோட்டை: எலி ஸ்பிரேயை முகத்தில் அடித்து விளையாடியதால் விபரீதம்... மருத்துவமனையில் 4 சிறுவர்கள்
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள மண்ணவேளாம்பட்டியைச் சேர்ந்தவர் ராமராசு. இவரது மகன் ரிசிகேஷ் (வயது-6). அதே பகுதியைச் சேர்ந்தவர்களான பழனிச்சாமி மகன் ரித்திக் (6), வீரப்பன் மகன் கருப்பசாமி (5), பரமசிவம் மகன் தனபிரியன்(5) இவர்கள் அனைவரும் நேற்று பள்ளி முடிந்து வந்து, ஒரே பகுதியில் நான்கு பேரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அப்பகுதியில் கிடந்த காருக்கு பயன்படுத்தக்கூடிய எலி ஸ்பிரேயை எடுத்து கையில் வைத்து விளையாடியதாக கூறப்படுகிறது. அப்போது, சிறுவர்கள் மாறி மாறி முகத்திலும் ஸ்ப்ரேவை அடித்து கொண்டதாக கூறப்படுகிறது. ஸ்பிரேயின் நுரை அந்த சிறுவர்களுடைய வாய் உள்ளே சென்றதாக கூறப்படுகிறது. இதனால், அந்த சிறுவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த சிறுவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உடனடியாக சிறுவர்களை மீட்டு அன்னவாசல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவர்களை மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருந்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, சிறுவர்களை மருத்துவர்கள் கண்காணித்து, சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஒரே பகுதியைச் சேர்ந்த இரண்டு ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் 2 எல்.கே.ஜி படிக்கும் மாணவர்கள் என 4 சிறுவர்கள் எலி ஸ்பிரேயை வைத்து விளையாடியபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.