செய்திகள் :

மதுரை: ரயிலில் இருந்து தவறி விழுந்த ஸ்டேஷன் மாஸ்டர்... பணி செய்யும் ஸ்டேஷனிலேயே உயிரிழந்த சோகம்

post image

கேரள மாநிலத்தை சேர்ந்த அனுசேசகர், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். 32 வயதாகும் இவருக்கு திருமணமாகி 4 மாத கைக்குழந்தை உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு கள்ளிக்குடி ரெயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக நியமிக்கப்பட்டவர் அப்பகுதியிலேயே வாடகை வீட்டில் வசித்தபடி வேலைக்கு சென்று வந்தார். குடும்பத்தினரை பார்க்க அவ்வப்போது சொந்த ஊருக்கும் சென்றும் வந்தார்.

அனு சேகர்

இன்று காலை வேலை நிமித்தமாக மதுரை செல்ல நினைத்தவர் காலை 8.30 மணிக்கு கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த செங்கோட்டை- ஈரோடு எக்ஸ்பிரசில் ஏறினார். என்ஜின் அருகே உள்ள பெட்டியில் ஏற முயன்றபோது ரயில் நகரத் தொடங்கியதை சற்றும் எதிர்பார்க்காமல் நிலைதடுமாறிய ரயில் இடுக்கில் சிக்கி தண்டவாளத்தில் விழுந்தார். ரயில் சக்கரம் தலையில் ஏற சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரயில்வே ஸ்டேஷனில் நின்ற பொதுமக்கள் கூக்குரலிட்டதை தொடர்ந்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.

பின்னர் ரயில்வே ஊழியர்களும், பொதுமக்களும் அனுசேகரின் உடலை பெரும் சிரமத்துக்கு இடையே மீட்டனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த விருதுநகர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கள்ளிக்குடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூணாறு: சுற்றுலா சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து; நாகர்கோவில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலியான சோகம்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவ மாணவியர், கேரளாவுக்கு சுற்றுலா சென்றனர். நேற்று நாகர்கோவிலில் இருந்து கேரளா பதிவெண் கொண்... மேலும் பார்க்க

Canada: தரையிறங்கும் நேரத்தில் தலைகீழாக கவிழ்ந்த பயணிகள் விமானம்; 17 பேர் காயம்... 3 பேர் படுகாயம்!

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தின் மினியாபோலிஸி விமான நிலையத்திலிருந்து டெல்டா ஏர் லைன்ஸ் ஜெட் விமானம் கனடாவை நோக்கிப் புறப்பட்டது. இந்த விமானத்தில் 80 பயணிகள், 4 விமானிகள் பயணம் செய்தனர். விமானம் கன... மேலும் பார்க்க

கோயில் விழாவில் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட யானைகள்; அலறிய பக்தர்கள் - 3 பேர் பலி... 32 பேர் காயம்!

கேரள மாநிலத்தில் கோயில் விழாக்களில் யானைகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. சுவாமி எழுந்தருளல், ஊர்வலம் உள்ளிட்டவைகளுக்கு யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டம், கோயிலாண்டி மணக்க... மேலும் பார்க்க

மதுரை மாட்டுத்தாவணியில் தோரண வாயில் இடிப்பு - விபத்தில் ஜேசிபி டிரைவர் மரணம்; ஒப்பந்ததாரர் படுகாயம்

மதுரையில் பல ஆண்டுகளுக்கு முன் உலத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டபோதும், அதற்கு பின்பு நடந்த அரசு நிகழ்ச்சிகளின்போதும் முக்கிய இடங்களில் தமிழுக்கு பெருமை சேர்த்தவர்களின் பெயரில் தோரண வளைவுகள் அமைக்கப்பட்டது... மேலும் பார்க்க

விருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்து; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்வு!

விருதுநகரை அடுத்த வச்சக்காரப்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட சின்னவாடி கிராமத்தில், சதானந்தபுரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (வயது 55) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை, 'சத்யபிரபு ஃபயர் ஒர்க்ஸ் ஃபேக்டரி' எனும... மேலும் பார்க்க

விருதுநகர்: என்.ஹெச்சில் அடுத்தடுத்து விபத்து: வேடிக்கை பார்த்தவர் உட்பட 3 பேர் பலி!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 36). அப்பகுதியில் உள்ள பட்டாசு கம்பேனி ஒன்றில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர், உறவினரிடம் பணம் வாங்... மேலும் பார்க்க