பாபர் அசாம் மீதான விமர்சனங்கள் சரியானவை: பாக். முன்னாள் வீரர்
Canada: தரையிறங்கும் நேரத்தில் தலைகீழாக கவிழ்ந்த பயணிகள் விமானம்; 17 பேர் காயம்... 3 பேர் படுகாயம்!
அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தின் மினியாபோலிஸி விமான நிலையத்திலிருந்து டெல்டா ஏர் லைன்ஸ் ஜெட் விமானம் கனடாவை நோக்கிப் புறப்பட்டது. இந்த விமானத்தில் 80 பயணிகள், 4 விமானிகள் பயணம் செய்தனர். விமானம் கனடாவின் டொராண்டோ விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்தனர். ஒரு குழந்தை, 60 வயது ஆண், 40 வயது பெண் ஆகிய மூன்று பேர் படுகாயமடைந்திருக்கின்றனர். உயிரிழப்பு ஏதும் இல்லை என விமான நிலைய அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ், ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக மருத்துவ சேவைகள் குழு தெரிவித்திருக்கிறது. இந்த விபத்துக்குப் பிறகு விமான நிலையம் இரண்டு மணி நேரத்திற்கு அனைத்து விமானங்களையும் ரத்து செய்தது. அதன் பிறகே மீண்டும் விமான சேவை தொடங்கியது. விபத்து நடந்த பகுதிக்கு விரைந்த கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரிய புலனாய்வாளர்கள் குழு விரைந்து விபத்துக்கான காரணத்தை ஆய்வு செய்துவருகின்றனர்.